அட புத்தாண்டு கொண்டாட்டத்த விடுங்க பாஸ்.. போதையில் அபராதம் கட்டியவர்கள் எத்தனை பேர் தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பொதுவாக புத்தாண்டு என்றாலே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விஷயம் என்பதால், மத பேதம் இல்லாமல் நாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விஷயம்.

சும்மாவே நம்ம மக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதில் வல்லவர்கள். அதிலும் மும்பை மக்கள் சொல்ல தேவையில்லை.

அட புத்தாண்டு கொண்டாட்டத்த விடுங்க பாஸ்.. போதையில் அபராதம் கட்டியவர்கள்  எத்தனை பேர் தெரியுமா..!

இந்த நிலையில் அண்மையில் குடித்து விட்டு வாகன் ஒட்டி செல்பவர்களுக்கும், ஹெல்மெட் இல்லாமல் செல்பவர், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர் என ஒவ்வொன்றுக்கும் நம் பாக்கெட்டை பதம் பார்க்கும் விதமாக அபராத தொகையினை அதிகரித்தது அரசு.

குத்தாட்ட ம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..!குத்தாட்ட ம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..!

இப்படியொரு நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, குடித்து விட்டு வாகனம் ஒட்டி சென்றதற்காக 778 பேருக்கு அபராதமும், இதே 1100 பேருக்கு மற்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அரங்கேற்றம் மும்பையில் தான் நடந்துள்ளது.

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் செவ்வாய்கிழமை இரவு முதல், காலை 6 மணி வரை, 5,338 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் மூத்த காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அட புத்தாண்டு கொண்டாட்டத்த விடுங்க பாஸ்.. போதையில் அபராதம் கட்டியவர்கள்  எத்தனை பேர் தெரியுமா..!

அதிலும் இவ்வாறு சோதனை செய்யப்பட்டவர்களில் 578 பேர் இருசக்கர வாகனத்தில் செல்பவருக்கு அபராதமும், 200 பேர் நான்கு சக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு இதே குற்றத்திற்காக 433 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 1,100 பேர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நாங்கள் அபராதம் விதித்தோம். இவர்களில் 601 பேர் ஜம்பிங் சிக்னல்களுக்காகவும், 258 பேர் மூன்று இருக்கைகள் சவாரி செய்ததற்காகவும், 241 பேர் அதிவேகமாக சென்றதற்காகவும் பிடிபட்டனர் என்றும் இணை போலீஸ் கமிஷனர் மதுகர் பாண்டே பிடிஐக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இதுபோன்றதொரு அறிக்கை வெளியாகவில்லை. அரசு என்ன தான் போக்குவரத்து விதிமுறைகளை கடினமாக்கினாலும், நாங்கள் செய்வதை செய்து கொண்டு தான் இருப்போம் என்பது போல நாளுக்கு நாள் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன. அபராதமும் வசூலிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New Year celebrations: over 778 people fined for drunk driving, 1,100 others booked other violations

As many as 778 people were fined for drunk driving, 1,100 others booked other violations. The police conducted random checks on 5,338 peoples in Mumbai from Tuesday night to Wednesday morning 6am.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X