அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி உலக மக்கள் தொகை 809 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 1 ஆம் பிறக்கும் போது நாட்டு மக்கள் தொகை 8,092,034,511 ஆக இருக்கும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை 7.1 கோடி அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் 7.5 கோடி மக்கள் தொகை அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் லேசாக குறைந்துள்ளது. நீண்ட காலமாக சீனா, ஜப்பான் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வேளையிலும் 2024 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முழுவதும் உலகளவில் ஒவ்வொரு வினாடியும் 4.2 பிறப்புகள் மற்றும் 2.0 இறப்புகள் நிகழும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில், பிறப்பு, இறப்பு மற்றும் சர்வதேச இடம்பெயர்வு ஆகியவற்றின் காரணமாக மக்கள் தொகை ஒவ்வொரு 23.2 வினாடிகளுக்கும் ஒரு நபர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவில் மக்கள் தொகை வளர்ச்சியின் தற்போதைய வேகத்தை காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி இந்தியா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றது. மக்கள் தொகை 141 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை தொடர்ந்து சீனா 140.8 கோடி மக்கள் தொகையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 341.1 மில்லியன் மக்கள் தொகையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.78% ஆகும்.
மக்கள் தொகை குறைந்து வருவகு 2024 ஆம் ஆண்டில் மிகவும் முக்கியமான விவாத பொருளாக இருந்தது. குறிப்பாக ஜப்பான் நாட்டில் இளம் தலைமுறையினர், பிறப்பு விகிதம் ஆகியவை அதிகளவில் குறைந்துள்ளதால் ஜப்பான் நாட்டின் நுகர்வு, உற்பத்தி, முதலீடு என அனைத்தும் குறைந்து வருகிறது.
உதாரணமாக ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான நிசான், ஹோண்டா ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியும், உலகளாவிய வர்த்தகமும் குறைந்துள்ளதால் அதன் வர்த்தகங்களை இணைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இப்படி மக்கள் தொகைக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications