புத்தாண்டு நெருங்கி விட்டது, 2023-க்கு டாடா பைபை சொல்லிவிட்டு டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியவில் உலகம் முழுவதும் மக்கள் விஷ் யூ ஹேப்பி நியூ இயர் என்று வாழ்த்து சொல்லி கொண்டாட தயாராகியுள்ளனற். அந்த நொடியில் 2023 முடிந்து 2024 தொடங்கிவிடும்.
2024 ஆம் ஆண்டில் இன்பம் துன்பம், மகிழ்ச்சி சோகம், வெற்றி தோல்வி, லாபம் நஷ்டம், பிறப்பு இறப்பு, சாதனை வேதனை என மாறுபட்ட நிகழ்வுகளை கட்டாயம் மக்கள் அனைவரும் சந்திக்க வேண்டியிருக்கும்.
இருப்பினும் புத்தாண்டை மக்கள் மனதார வரவேற்று கொண்டாடுகின்றனர். ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.

இதனிடையே இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. நாடுக்கு நாடு அவர்களது பாரம்பரிய சென்டிமென்ட்களுக்கு ஏற்ப மாறுபடும். இதில் புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை மட்டுமே வேண்டி கடைப்பிடிக்கப்படும் சுவாரஸ்யமான 10 மரபுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டில், நள்ளிரவில் 12 திராட்சைப்பழங்களை உண்பது ஒரு பாரம்பரியம்., ஒவ்வொரு திராட்சையும் எதிர்வரும் ஆண்டின் ஒவ்வொரு மாதத்துக்கும் நல்ல அதிர்ஷ்டத்தை சேர்க்கும் என நம்பப்படுகிறது.
ஜப்பான்: மனிதர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய பூமிக்குரிய 108 ஆசைகளைக் குறிக்கும் வகையில் ஜப்பானியர்கள் கோயில்களுக்குச் சென்று 108 முறை மணிகளை அடித்து ஒலிக்கின்றனர். இதன்மூலம் தங்களை துன்பங்கள் எல்லாம் விட்டுச் சென்று விடும் என நம்புகின்றனர்.
ஸ்காட்லாந்து: ஹோக்மனே என்றழைக்கப்படும் ஸ்காட்டிஷ் புத்தாண்டு கொண்டாட்டமானது வித்தியாசமாக உள்ளது. நள்ளிரவு கடந்தபின் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் முதல் நபர் தன்னுடன் அதிர்ஷ்டத்துக்கான பரிசுகளைக் கொண்டு வருவார்.
பிரேசில்: பிரேசிலியர்கள் புத்தாண்டு பிறக்கும் தினத்தின் நள்ளிரவில் வெண்மை நிறத்தில் ஆடைகள் அணிந்து தங்களது கடல் தெய்வமான யெமன்ஜாவை பூஜிக்கும் வகையில் கடலில் மலர்களைத் தூவுவர். இதன்மூலம் யெமன்ஜாவின் ஆசிர்வாதம் தங்களுக்கு புத்தாண்டில் கிடைக்கும் என நம்புகிறார்கள்.
டென்மார்க்: டென்மார்க்கில் நடைபெறும் புத்தாண்டு மரபு சற்று வேடிக்கையானது. தங்களது நண்பர்கள், உறவினர்களின் வாசல் கதவுகளில் பாத்திரங்களை எறிந்து உடைப்பார்கள். இதன்மூலம் அவர்களது நட்பும் உறவும் பலப்படுவதோடு அதிர்ஷ்டமும் வந்து சேரும் என்பது அவர்களது ஐதீகம்.
கிரீஸ்: புத்தாண்டு தினத்தன்று கிரேக்கர்கள் வாசிலோபிடா என்று அழைக்கப்படும் ஒரு வகை கேக்கை தயாரிக்கும்போது அதில் ஒரு நாணயத்தை புதைத்து விடுகிறார்கள். அந்த கேக்கை துண்டாக்கி குடும்பத்தாருக்கு வழங்குவார்கள். யாருடைய கேக் துண்டில் அந்த நாணயம் இருக்கிறதோ அவர்களுக்கு அந்த ஆண்டு அதிர்டத்தைக் கொண்டு வந்து கொட்டும் என்று நம்புகின்றனர்.
தென்னாப்பிரிக்கா: பழையன கழிதலும் புதியன புகுதலும்- இதுதான் தென்னாப்பிரிக்க மக்களின் புத்தாண்டு குறிக்கோள். வீட்டிலுள்ள பழைய சேர், நாற்காலி, சோபா போன்ற தட்டுமுட்டுச் சாமான்களையெல்லாம் சுக்குநூறாக உடைத்து அதை தங்கள் வீட்டு ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிவார்கள். இதன்படி புத்தாண்டில் தங்களது வீட்டில் நிலவிய பழைய நிலைமைகள் மாறி புதிய சூழ்நிலை உருவாகும் என்று கருதி இந்தச் சடங்கை செய்கின்றனர்.
பிலிப்பைன்ஸ்: பிலிப்பினோக்களுக்கு வட்ட வடிவங்கள் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்புகிறார்கள். எனவே அவர்கள் புத்தாண்டின் நள்ளிரவில் போல்கா எனப்படும் வட்டமான புள்ளியிட்ட ஆடைகளை அணிந்துகொண்டு வட்டமான அல்லது உருண்டையான பழங்களை குடும்பத்தாருக்கு விருந்து படைத்து சாப்பிடுகின்றனர்.
ரஷ்யா: புத்தாண்டை ரஷ்யர்கள் வரவேற்கும் முறையைக் கேள்விப்பட்டால் அட இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லியேன்னு வாயைப் பிளக்கப் போவோர் அதிகமாக இருப்பது நிச்சயம். புத்தாண்டில் தாங்கள் விரும்பும் விஷயங்களை எல்லாம் ஒரு காகிதத்தில் பட்டியலிட்டு அதை தீயில் கொளுத்தி சாம்பலாக்கி விடுவர். பின்னர் அந்த சாம்பலை நள்ளிரவில் ஷாம்பெயின் மதுபானத்தில் கலந்து குடிப்பார்கள். மிக்சிங் டிஷ் சாம்பலாக இருந்தாலும் குடிப்பது என்னவோ காஸ்ட்லியான ஷாம்பெயின் தானே!
அமெரிக்கா: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள ஒன் டைம்ஸ் ஸ்கொயர் பில்டிங்கின் உச்சியில் இருந்து ஒரு பந்து வடிவிலான மிகப் பெரிய கோளத்தை கட்டட உச்சிக்கு ஏற்றுவார்கள். முன்னதாக பந்துருண்டைகள் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படிச் செய்யும்போது வண்ண வண்ண வாண வேடிக்கைகள் நடத்தப்படும். இது பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருக்கும். இந்த நிகழ்வின் மூலம் புத்தாண்டில் தமது வாழ்க்கையில் பிரகாசம் ஏற்படும் என்பது மரபு.
இந்த மரபுகள் எல்லாம் உலகில் உள்ள பலதரப்பட்ட கலாசாரங்கள், நம்பிக்கைகள், பாரம்பரியங்கள் ஆகியவற்றுக்கு சில எடுத்துக்காட்டுகளே ஆகும். ஒவ்வொரு கலாசாரத்துக்கும் ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கிறது. அதன்படி அவர்கள் புத்தாண்டை தங்களது மரபுகளின்படி வரவேற்று மகிழ்கின்றனர். அதிர்ஷ்டம் விளையும் எனக் கருதுகின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications