அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து பல விமானங்கள் விபத்துகளை எதிர்கொண்ட நிலையில் தற்போது ஒரு ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது. இதில் சிமென்ஸ் ஸ்பெயின் நிறுவனத்தின் CEO-வின் மொத்த குடும்பம் மரணம் அடைந்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று (ஏப்ரல் 10 ஆம் தேதி)அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3:15 மணியளவில், நியூயார்க் நகரத்தில் இந்த விபத்தில் நடந்தது. சிமென்ஸ் ஸ்பெயின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் அவர்களது மூன்று இளம் குழந்தைகள் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சர்வதேச வர்த்தக துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகஸ்டின் எஸ்கோபார், சிமென்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி, பல முக்கிய பதவிகளில் இருந்தவர். 2019 முதல் சிமென்ஸ் மொபிலிட்டி பிரிவின் தென்மேற்கு ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், ஸ்பெயின் நாட்டின் ஜெர்மன் வர்த்தக சபையின் துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றி வந்தார்.
இதற்கு முன்பு அதாவது 2014 முதல் 2018 வரை லத்தீன் அமெரிக்காவில் உள்ள சிமென்ஸ் எனர்ஜி மேனேஜ்மென்ட் பிரிவு மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் & சிட்டிஸ் துறையின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் பணியாற்றினார்.
இதற்கு முன்பு, வட அமெரிக்காவில் சிமென்ஸின் மூலோபாயம் மற்றும் சர்வதேச வணிக மேம்பாட்டுக்கான கார்ப்பரேட் இயக்குநராக பணியாற்றினார். 1998 முதல் 2010 வரை ஸ்பெயினில் உள்ள சிமென்ஸில் எனர்ஜி துறையில் பல பொறுப்புகளை வகித்தது.
எஸ்கோபார் குழந்தைகள் மூன்று பேரும் பள்ளிக்கு செல்பவர்கள், குடும்பமாக நியூயார்க் நகருக்கு விடுமுறைக்காக பார்சிலோனாவில் இருந்து வந்திருந்தனர். விடுமுறை முடித்துவிட்டு பார்சிலோனாவிற்கு புறப்படுவதற்குச் சற்று முன்பு இந்த விபத்து நடந்துள்ளது.

எஸ்கோபார் குடும்பம் பெல் 206L-4 லாங்ரேஞ்சர் IV ஹெலிகாப்டரில் பயணித்தனர், மன்ஹாட்டன் மற்றும் நியூ ஜெர்சி கடற்கரைக்கு இடையே உள்ள ஹட்சன் நதியில் இந்த ஹெலிகாப்டர் தலைகீழாக விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், வானில் இருந்து வேகமாக ஹட்சன் நதியில் விழுந்தது விபத்து ஏற்பட்டது.
விபத்து நடத்த இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். இதன் மூலம் அகஸ்டின் எஸ்கோபார் மொத்த குடும்பமும் இந்த விபத்தில் இறந்தனர்.
அகஸ்டின் எஸ்கோபார் குடும்பத்தின் ஐந்து பேரும் இந்த பயணத்தைத் துவங்குவதற்கு முன்பு ஹெலிகாப்டருக்கு முன்னால் போஸ் கொடுத்த ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விமானி யார், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications