சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதாக அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அமெரிக்க அரசு மற்றும் வங்கி கட்டுப்பாட்டு ஆணையம் நியூயார்க் Signature Bank-ஐ மூடியுள்ளது.
Recommended Video
48 மணிநேரத்தில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலாகியுள்ளது, முதலில் சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒட்டுமொத்த டெக் துறையிலும் ஆடிப்போய் இருக்கும் வேளையில், தற்போது நியூயார்க் Signature Bank திவாலாகி மூடப்பட்டு உள்ளது.
இது ஒட்டுமொத்த நிதியியல் சந்தைகளை மோசமான நிலைக்கு கொண்டு போகும் எனவும் 2008 ஆம் ஆம் ஆண்டில் உருவாக சர்வதேச நிதியியல் நெருக்கடிக்கு இது வழிவகுக்குமா என்ற அச்சமும், சந்தேகமும் அதிகரித்துள்ளது.
சிலிக்கான் வேலி பேங்க்
சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்ட அடுத்த 48 மணிநேரத்தில் இன்னொரு வங்கி மூடப்பட்டு இருக்கும் வேளையில் ஒட்டுமொத்த அமெரிக்க முதலீட்டு சந்தையும் அச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஜோ பைடன் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும், Signature Bank-ல் டெபாசிட் செய்தவர்கள் அனைவரும் பணம் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
Signature Bank திவால்
சிலிக்கான் வேலி பேங்க் சுமார் 210 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு மற்றும் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான டெபாசிட் உடன் திவாலாகியிருக்கும் வேளையில், ஞாயிற்றுக்கிழமை திவாலாகியுள்ள Signature Bank சுமார் 110.36 பில்லயன் டாலர் சொத்து மதிப்புடனும், 88.59 பில்லியன் டாலர் தொகை டெபாசிட் ஆக கொண்டு திவாலாகியுள்ளது என நியூயார்க் மாநில நிதி சேவை துறை தெரிவித்துள்ளது.
FDIC அமைப்பு
சிலிக்கான் வேலி பேங்க் போலவே Signature Bank-ஐயும் அமெரிக்க அரசின் Federal Deposit Insurance Corporation அமைப்பு முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் வாயிலாக Signature Bank-ன் வாடிக்கையாளர் அனைவருக்கும் முதல்கட்டமாக FDIC அமைப்பு அனைத்து டெபாடிட் வாடிக்கையாளர்களுக்கும் டெபாசிட் இன்சூரன்ஸ் தொகையான 250000 டாலர் வரையிலான தொகையை அளிக்க உள்ளது.
கிரிப்டோகரன்சி
மேலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ், FDIC மற்றும் அமெரிக்க கருவூல அமைப்பு Signature Bank குறித்து தனது டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க அறிக்கையில், Signature Bank பிராந்திய வங்க சேவை அளித்தாலும், பெரும் தொகையை கிரிப்டோகரன்சியில் வைத்துள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.
காரணம்
Signature Bank பங்குகளின் மதிப்பு சரிவுக்கு கிரிப்டோ எக்ஸ்போஷர் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்க அமெரிக்க வரலாற்றில் Signature Bank திவால் 3வது அதிக மதிப்புடைய வங்கியாக இருக்கும் என அறியப்படுகிறது.
அமெரிக்க பொருளாதாரம்
சிலிக்கான் வேலி பேங்க் மற்றும் Signature Bank அடுத்தடுத்து திவாலாகியுள்ள நிலையில் அமெரிக்க பொருளாதாரம் வலிமையாக்கும் விதிமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமெரிக்க அரசு அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications