நியூசிலாந்து: வெளிநாட்டவர்கள் தம்பதி சகிதமாக வந்து பணிபுரிய ஏதுவாக பல்வேறு புதிய அறிவிப்புகளை நியூசிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி நியூசிலாந்தில் குடிபெயர்ந்து வேலை செய்து வருபவர்கள் (NRI), அவர்களின் வாழ்க்கை துணைகளை நியூசிலாந்துக்கு வரவழைக்கலாம் என்றும் அவர்களும் நியூசிலாந்தில் எந்த தடையும் இன்றி பணிபுரியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நியூசிலாந்துக்கு குடிப்பெயரும் நபர்கள் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வார்கள் என்பதோடு மட்டும் இல்லாமல் குடும்பமாக இருக்கும்போது அவர்கள் அவ்வளவு எளிதாக நியூசிலாந்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது.
நியூசிலாந்தில் தற்போது பல்வேறு வேலைகளுக்கும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது, எனவே நியூசிலாந்து அரசு ஓப்பன் ஒர்க் ரைட் (open work rights) என்ற ஒரு புதிய விதிமுறையை அறிமுகம் செய்துள்ளது. வரும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
நியூசிலாந்தில் அக்ரெடிடேட் எம்ப்ளாயர் ஒர்க் விசா (Accredited Employer Work Visa ) பெற்றவர்கள் மற்றும் higher-skilled ரோல்களில் பணிபுரிபவர்கள் சராசரி ஊதியத்தை விட 80 சதவீதத்திற்கும் மேல் அதிக ஊதியம் வாங்குபவர்கள் அவர்களின் வாழ்க்கை துணைகளை அழைத்து வந்து இங்கே வைத்துக் கொள்ளலாம்.
அவர்களும் இங்கே எளிதாக நிறுவனங்களில் பணிக்கு சேரலாம் என கூறப்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்தில் விசா பெற்று வேலை செய்பவர்கள் இனி எளிதாக அவர்களின் வாழ்க்கை துணைகளையும் அங்கே அழைத்துச் செல்ல முடியும்.
இதற்கு டிசம்பர் 2 ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஓபன் வொர்க் விசா என நியூசிலாந்து அரசாங்கம் வரையறை செய்துள்ளது.
இவ்வாறு வருபவர்கள் வேலை வாய்ப்புடன் தான் நியூசிலாந்துக்கு வர வேண்டும் என்று அவசியம் கிடையாது. அவர்கள் ஒர்க்கிங் ஹாலிடே விசா திட்டங்களில் வந்து பின்னர் வேலை தேடிக் கொள்ளலாம். மேலும் நியூசிலாந்து குடிமகன்களின் வாழ்க்கைத் துணையாக இருப்பவர்கள், நியூசிலாந்தில் குடியிருப்பதற்கான விசாவை பெற்றிருப்பவர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகையிலான வேலைக்கான விசாக்களை பெற்றிருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இந்தியாவில் இருந்து நியூசிலாந்து சென்று பணிபுரிவர்களுக்கு பெருமளவில் உதவியாக இருக்கும். ஏனெனில் இதற்கு முன்பு நியுசிலாந்தில் வேலைக்கான விசாவில் சென்றவர்கள் வாழ்க்கை துணையை அழைத்து வர வேண்டும் எனில் அவர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என நிபந்தனை இருந்தது. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் 2,40,000 இந்தியர்கள் வேலை செய்கின்றனர். அந்த மக்கள் தொகையில் இது 5% என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications