உலகின் அழகிய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் நியூசிலாந்து, தற்போது பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. இதேவேளையில் இந்த சவாலை இந்தியர்கள் மிகவும் சிறப்பாக பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக மாற்றி வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டில் இருந்து பெருமளவிலான மக்கள் அந்நாட்டை வெளியேறி வருவதால், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடி படித்த மற்றும் திறன்வாய்ந்த இந்தியர்களுக்கு சாதகமாக மாற்றி வருவது மட்டும் அல்லாமல் குட்டி இந்தியாவாக நியூசிலாந்தை மாற்றி வருகின்றனர்.

2024ல் மட்டும் நியூசிலாந்து குடிமக்களில் சுமார் 2.5 சதவீதம் பேர் அதாவது 1.27 லட்சம் பேர் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் உச்சபட்சமான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வேலைவாய்ப்பு துறையில் காலியான இடங்களை நிரப்புவதில், இந்தியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர் என முதலீட்டு வங்கியாளரான சர்தக் அஹுஜா தனது லின்கிடுஇன் பதிவில் தெரிவித்துள்ளார்.
1991க்குப் பிறகு நியூசிலாந்து மிக மோசமான பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டில் வேலையின்மை அதிகரித்து, உற்பத்தித் திறன் குறைந்துள்ளது. இதனால், இளைஞர்கள் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு தாவுகின்றனர், ஏனெனில் அங்கு சம்பளமும் அதிகம், வேலை வாய்ப்புகளும் அதிகம். இதுமட்டும் அல்லாமல் ஆஸ்திரேலிய நாட்டில் நியூசிலாந்து மக்களை அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதால் அதிகளவிலான மக்கள் இந்நாட்டிற்கு குடியெர முக்கிய காரணமாக உள்ளது.
நியூசிலாந்து மக்கள் ஏன் தங்கள் நாட்டை விட்டு வெளியேற என்ன காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நியூசிலாந்தில் வீட்டு விலைகள் அதாவது ரியல் எஸ்டேட் விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்து இருக்கிறது. இதனால் இளம் தலைமுறையினரை சொந்த வீடு வாங்க முடியாமலும், அதிகப்படியான வாடகை கொடுத்து தங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.
இதேபோல் பல்வேறு காரணத்தால் மந்தமடைந்த பொருளாதாரத்தால் நியூசிலாந்தில் வாழ்க்கைச் செலவு அதாவது Living cost மிகவும் அதிகமாக உள்ளது, இதேவேளையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. உள்ளூர் வேலையின்மை 50 ஆண்டுகளுக்கான உச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அருகில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு அதிகப்படியானோர் படையெடுக்கின்றனர்.
இந்த வெளியேற்ற நெருக்கடி, இந்தியர்களுக்கு பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. 2024ல், நியூசிலாந்துக்கு வந்த இந்தியர்களின் எண்ணிக்கை உச்சபட்ச அளவான 27,100 தொட்டு உள்ளது. இது, முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகும்.
2025 ஜூன் முதல், இந்திய கல்லூரியில் பெற்ற பட்டங்களை நியூசிலாந்து அரசு அங்கீகரிக்கப்படுகின்றன, இதனால் கூடுதல் தகுதி தேர்வுகள் இன்றி வேலைக்கு சேரலாம். இந்த மாற்றம், அந்நாட்டில் உருவான தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப உதவி வருகிறது. இதை இந்தியர்கள் தங்கள் திறமைகளுக்கு ஏற்ப பயன்படுத்தி வருகின்றனர்.
நியூசிலாந்து அரசு, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, கிரீன் லிஸ்ட் எனும் பட்டியலை உருவாக்கியுள்ளது. இதில் உள்ள தொழில்களுக்கு பணியில் சேரும் வெளிநாட்டவர்களுக்கு உடனடி குடியிருப்பு விசா வழங்கப்படுகிறது. ஐந்து முக்கிய துறைகள் இதில் அடங்கும்:
முதலாவது, சுகாதாரத் தொழிலாளர்கள் - மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஆய்வக நிபுணர்கள். இரண்டாவது, கட்டுமானம், சிவில் இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான பொருள் மேலாளர்கள். மூன்றாவது, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் மற்றும் டேட்டாபேஸ் மேனேஜர்கள். நான்காவது, சுற்றுச்சூழல் மற்றும் விஞ்ஞானிகள். ஐந்தாவது, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள்.
இதோடு, கணக்காளர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கும் தேவை அதிகமாக உள்ளது. 2025 ஆகஸ்ட் முதல், பத்து புதிய தொழில்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியர்கள் இதை பெரிய அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
பல இந்தியர்கள், நியூசிலாந்தை ஆஸ்திரேலியாவுக்கான மாற்று இடமாக பார்க்க துவங்கியுள்ளனர். நியூசிலாந்தில் குடியிருப்பு விசாவுடன் ஐந்து ஆண்டுகள் வேலை செய்த பிறகு, நியூசிலாந்து குடியுரிமை பெறலாம். இதன் பிறகு, ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய தகுதி கிடைக்கிறது, ஏனெனில் இரு நாடுகளுக்கும் சிறந்த உறவு உள்ளது.
நியூசிலாந்தில் பணியாற்றி அனுபவத்துடன் ஆஸ்திரேலியாவில் வேலை தேடினால் அதிக ஊதியத்துடன் வேலை கிடைக்கும், நான்கு ஆண்டுகள் பணியாற்றி ஆஸ்திரேலிய குடியுரிமையும் பெறலாம். இந்த வழி, சட்டப்பூர்வமாகவும் எளிதாகவும் உள்ளது, இது இந்தியர்களுக்கு இரட்டை நன்மையை அளிக்கிறது.
உலகம் முழுவதும், மக்கள் தொகையில் வயதானோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால், நர்ஸ்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பெரும் தேவை உள்ளது. இதனால் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில், இந்திய நர்ஸ்களுக்கு பெரிய அளவிலான டிமாண்ட் உள்ளது.
2025ல், நர்ஸ்களுக்கான தேவை 15-30 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெறும் ஊதியத்தை விட இந்த நாடுகளில் மூன்று மடங்கு அதிகம் வழங்கப்படுகிறது, இதோடு சிறந்த சலுகைகளும் உண்டு.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications