கோடீஸ்வரனாகும் கனவு எல்லோருக்கும் இருக்கும், இதை அடைய பலருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைத்தாலும் போதாது, சிலருக்கு கடும் உழைப்பு மற்றும் ஸ்மார்ட்டான முடிவுகள் ஆகியவற்றாலும் வேகமாக முன்னேறும் வாய்ப்புகளை பெறுவார்கள். ஆனால் இங்கு பிறந்த இரண்டே நாளில் ஒரு பெண் குழந்தை பல கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை பெற்றுள்ளது.
Barrie Drewitt-Barlow என்ற பிரிட்டன் பணக்காரர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் தனக்கு பேத்தி பிறந்துள்ள செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டதோடு பேத்திக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு மற்றும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான டிரஸ்ட் பண்ட் பணத்தை கொடுத்துள்ளார்.

பேரி மற்றும் டோனி ட்ரூவிட் பார்லோ இவரும் ஓரின சேர்க்கை ஜோடி, இவர்களுக்கு சாப்ரான் ட்ரூவிட்-பார்லோ மற்றும் அஸ்பென் ட்ரூவிட்-பார்லோ என்ற மகள், மகன் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லியன் டாலருக்கு கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது முதல் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு காஸ்ட்லியான கிப்ட் கொடுக்கப்படுவது வழக்கமாக கொண்டு உள்ளார் பேரி ட்ரூவிட் பார்லோ.

இந்த வகையில் சாப்ரான் ட்ரூவிட்-பார்லோ மற்றும் அவரது கணவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்த கையோடு பேரி ட்ரூவிட் பார்லோ மிகவும் முக்கியமான இடத்தில் 1 மில்லியன் பவுண்ட் தொகைக்கு மாபெரும் வீட்டை வாங்கி கொடுத்து மட்டும் அல்லாமல் பெண் குழந்தைக்கு தேவையான இன்டிரியர் டிசைன்களையும் செய்ய உள்ளார்.

சாப்ரான் ட்ரூவிட்-பார்லோ-வின் சகோதரர் அஸ்பென் ட்ரூவிட்-பார்லோ 5000 பவுண்ட் மதிப்புள்ள Dior pram மற்றும் pushchair பரிசாக கொடுத்துள்ளார். Barrie Drewitt-Barlow முதல் பேரக்குழந்தை என்பதால் பாசத்தை பணம் மூலம் காட்டியுள்ளார்.

பேரி மற்றும் அவருடைய முன்னாள் கணவர் டோனி ட்ரூவிட் பார்லோ அட்லாண்டிக் பகுதியில் வாடகைத் தாய் ஏஜென்சி உட்பட பல பிஸ்னஸ் மூலம் செல்வத்தைக் குவித்துள்ளனர். இருவரும் தங்களது குடும்பத்திற்காக பணத்தை செலவழிப்பதை விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications