மத்திய அரசீன் கீழ் செயல்படும் இந்திய ரிஜிஸ்டார் ஜெனரல் (RGI) அமைப்பு, நாட்டில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிரசவத்திற்கு பின்பு மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதற்கு முன் பெற்றோர்-களுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, ஜூன் 12, 2025 அன்று வெளியிடப்பட்டது.
இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட குழந்தை பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவதால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ், கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் திருமண பதிவு போன்றவற்றுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழ் கருதும் சட்டம் 2023 முதல் அமலில் உள்ளது.

ஆர்ஜிஐ அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தை பிறப்பு பதிவு செய்யப்பட்ட உடன், ஏழு நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழை தாய்மார்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ், எலக்ட்ரானிக் அல்லது பிற வடிவங்களில் வழங்க அனுமதி அளித்து. ஆனால் ஏதேனும் ஒரு வகையில் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது உத்தரவு.
"இந்தியாவில் தற்போது பிறப்பு சான்றிதழின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவத்திற்கு பிறகு உடனடியாக வழங்குவது அவசியம்," என ஆர்ஜிஐயின் உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகள், சமுதாய சுகாதார மையங்கள், மற்றும் முதன்மை சுகாதார மையங்களில் பிறக்கும் வேளையில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதை சீர்படுத்துவது முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பிறப்பு சான்றிதழின் முக்கியத்துவம்: 2023 அக்டோபர் 1 முதல், டிஜிட்டல் பிறப்பு சான்றிதழை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, அரசு வேலைகள், திருமண பதிவு, மற்றும் பிற சேவைகளுக்கு ஒரே ஆவணமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ், மக்களுக்கு அரசு மற்றும் தனியார் சேவைகளை எளிதாக பெற உதவுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு ஏற்ப, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications