பெங்களூரின் ஹெச்எஸ்ஆர் பகுதியில் ஒரு கடையில் பயன்படுத்தப்படும் ஆட்டோமேடிக் பானி பூரி தயாரிக்கும் மெஷின் பற்றி சோசியல் மீடியாவில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பதிவுகள் பகிரப்படுகின்றன. சோசியல் மீடியாவில் அந்த மெஷின் பற்றி ஒரு பதிவர் பகிர்ந்து கொண்ட பின்னர் சமூக தளங்களில் இது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்த மெஷினை பயன்படுத்துவதால் சுத்தம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
எக்ஸ் பதிவில் பெனடிக்ட் என்பவர் பதிவிட்ட கருத்தில் பானிபூரி கடையில் உள்ள பெண்மணி அந்த மெஷினை கையாள்வது பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்த மெஷினில் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் ருசியிலான பானியை தேர்ந்தெடுக்கலாம். பூரியில் உருளைக்கிழங்கு, பட்டாணியை ஒரு பைப் மூலம் நிரப்புகிறார் அந்த பெண்மணி.

மெஷினில் பூரியை வைத்தவுடன் அதிலிருந்து பானி பூரியில் நிரம்புகிறது. ஹெச்எஸ்ஆர் 2050-ஆம் ஆண்டில் உள்ளது என்று பெனடிக்ட் கூறியுள்ளார். இதை பார்க்கையில் பானிபூரி நல்ல தரத்துடனும் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் விரும்பும் சுவையில் பானியை நிரப்பி சாப்பிடலாம். இந்தியாவில் பானி பூரி மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸாக உள்ளது.
ஹெச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள இந்த ஆட்டோமேடிக் பானி பூரி மெஷின் இப்போது வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. கர்நாடகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 260 கடைகளில் பரிசோதனை செய்ததில் 41 கடைகளில் செயற்கை நிறம் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜெனிக் பொருட்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்துள்ளனர்.
18 சாம்பிள்கள் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என்று தெரியவந்துள்ளதால் பெங்களூரில் சாலையோரக் கடைகளில் உணவு சாப்பிடுவதை கேள்விக்குறியாக ஆக்கியுள்ளது.
இது பற்றி ஆன்லைன் பயனர்கள் கூறுகையில் புதிய ஆட்டோமேடிக் பானி பூரி மெஷின்கள் சுகாதாரமானவை என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஒருவர் தனது பதிவில் நான் மும்பையில் பிறந்து வளர்ந்தேன். அங்கு கையால் பூரிகளை எடுத்துப் பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பெங்களூரில் கேஎப்சி தயாரிப்புகளைக் கூட சாப்பிடுவதற்கு பயமாக உள்ளது. இந்த ஆட்டோமேடிக் பானி பூரி மெஷின் ஈடுஇணையற்ற அளவில் சுகாதாரமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மற்றொருவர் இப்போது ஆட்டோமேடிக் பானி பூரி மெஷின் மூலமாக நல்ல தரமான உணவை சாப்பிடலாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆட்டோமேடிக் பானி பூரி மெஷின் மூலம் தயாரிக்கப்படும் பானி பூரியை குழந்தைகள் கூட பாதுகாப்பாக சாப்பிடலாம். முதியவர்களும் சாப்பிடுகின்றனர். கையில் பூரியை எடுத்து அதில் உருளைக்கிழங்கு, பட்டாணியை சேர்க்காததால் மிகவும் சுத்தமாக உள்ளது.
Written by: Jayachandran


Click it and Unblock the Notifications