ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளத்தில் டீம் லீடர் வேலை.. நியூயார்க்கை சேர்ந்த நிறுவனம் அறிவிப்பு..

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தை நடத்தி வரக்கூடிய ஆதித்யா சிரிபிரகடா தன்னுடைய நிறுவனத்திற்கு டீம் லீடர் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாகவும் ஆண்டுக்கு 72 லட்சம் சம்பளம் வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய டெக் நிறுவனம் தான் Fountane . இதன் துணை நிறுவனராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் இருப்பவர்தான் ஆதித்யா. சமூக வலைத்தளங்களில் இவரை ஆயிரக்கணக்கானவர்கள் பின் தொடர்கின்றனர். இவர் தன்னுடைய நிறுவனத்தில் டீம் லீடர் வேலைக்காக அண்மையில் ஒரு நபரை வேலைக்கு தேர்வு செய்ததாகவும் அவர் ஆண்டுக்கு 72 லட்சம் ரூபாய் ஊதியம் வாங்குகிறார் ஆனால் அவர் அதற்கு நிகரான வேலையை செய்யவில்லை எனக் கூறியிருக்கிறார்.

ஆண்டுக்கு ரூ.72 லட்சம்  சம்பளத்தில் டீம் லீடர் வேலை.. நியூயார்க்கை சேர்ந்த நிறுவனம் அறிவிப்பு..

என்னுடைய நிறுவனத்தில் மிக முக்கியமான ஒரு பிராஜெக்டுக்கு டீம் லீடரை தேர்வு செய்து அவருக்கு ஆண்டுக்கு 55 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குகிறோம். ஆனால் அவருடைய செயல்திறன் எங்களின் எதிர்பார்ப்பில் பாதி அளவை கூட பூர்த்தி செய்யவில்லை விரைவில் அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை இந்த பணிக்கு நியமனம் செய்யும் இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். இந்த வேலைக்கு ஆண்டுக்கு 55 லட்சம் ரூபாய் அடிப்படை ஊதியம், மொத்த ஊதியமாக 72 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு இது நீங்கள் டீம் லீடராக செயல்பட்டு இருக்கிறீர்கள் என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்னுடைய நிறுவனத்திற்கு நான் வேலைக்கு எடுத்துக் கொள்கிறேன். இதற்கு முன்பு இந்த பணி அனுபவம் இல்லாதவர்கள் தயவு செய்து என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டு இருக்கிறார்.

அவருடைய இந்த எக்ஸ் பதிவு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பலரும் தாங்கள் ஆர்வமாக இருப்பதாக பின்னூட்டம் தெரிவித்து இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த தொழில் முனைவோர் தான் ஆதித்யா. இவர் Fountane என்ற நிறுவனத்தை தொடங்கி நியூயார்க்கில் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் டிஜிட்டல் மற்றும் ஏஐ டூல்ஸ்களை பயன்படுத்தி ஸ்டார்ட் அப் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கு உதவி செய்து வருகிறது. அமெரிக்காவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய 884 ஆவது நிறுவனமாக 2024 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. மின்னசோட்டா மாநிலத்தில் செயல்படும் முதல் 10 டெக் நிறுவனங்களில் ஒன்றாகவும் இது இடம் பிடித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+