நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு புதிய ஊதிய வெளிப்படைத்தன்மை சட்டம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இப்புதிய சட்டத்தின் கீழ் கூகுள், ட்விட்டர், பெப்சிகோ, ஜேபி மோர்கன் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குகின்றன என்பதை வேலை தேடுபவர்கள் எளிதாகச் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
புதிய ஊதிய வெளிப்படைத்தன்மை சட்டம் மூலம் நியூயார்க் நகரில் பணியமர்த்தப்படும் அனைத்து நிறுவனங்களும் ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கை (good faith) அளிக்கும் வகையில் சம்பள வரம்புகளைக் காட்ட வேண்டும் என்று இச்சட்டம் வலியுறுத்துகிறது.
நியூயார்க்
இதன் மூலம் அனைத்து நியூயார்க் நிறுவனங்களும் புதிய வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்ற வாய்ப்புகள் ஆகிய அனைத்திற்கும் அதிகப்படியான மற்றும் குறைந்தபட்ச சம்பள அளவீடுகளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது.
சம்பள வரம்பு
ஒரு நிறுவனம் பணியிடத்திற்கான சம்பள வரம்பைப் பட்டியலிடவில்லை என யாரேனும் புகாரளித்தால், நிறுவனங்கள் தங்கள் வேலைவாய்ப்புப் பதிவுகளில் விபரங்களைப் புதுப்பிக்க நியூயார்க் நகர மனித உரிமைகள் ஆணையத்திடம் இருந்து 30 நாட்கள் அவகாசம் கிடைக்கும். 30 நாட்களுக்குப் பின்பும் விபரங்களைப் புதுப்பிக்காவிட்டால், ஒருமுறை விதிமீறலுக்கு 250,000 டாலர் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
நவம்பர் 1 ஆம் தேதி
நவம்பர் 1 ஆம் தேதி சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே, நியூயார்க்-ல் பணி அமர்த்தும் பல முன்னணி பெரிய நிறுவனங்கள் தங்கள் வேலை இடுகைகளில் ஊதிய வரம்புகளை வெளியிடத் தொடங்கின. இதில் கூகுள், டிவிட்டர், அமேசான், டெலாய்ட் ஆகியவையும் அடக்கம்.
கூகுள்
நியூயார்க்கில் பணிபுரியும் கூகுளில் உள்ள விளம்பரத் தனியுரிமை நிபுணர் ஒருவர் அடிப்படைச் சம்பளமாக 135,000 டாலர் முதல் 209,000 டாலர் வரை அளிக்கப்படுகிறது. மேலும் போனஸ் மற்றும் பிற பலன்களைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
ஒரு வருவாய் நிபுணர், 103,000 டாலர் முதல் 157,000 டாலர் வரை சம்பாதிக்க எதிர்பார்க்கலாம் எனத் தனது வேலைவாய்ப்புப் பதிவில் சம்பளம் குறித்த விபரங்களைக் கொடுத்துள்ளது.
ட்விட்டர்
நியூயார்க்- இல், ட்விட்டரில் ஒரு மெஷின் லேர்னிங் இன்ஜினியர் 212,000 டாலர் மற்றும் 297,000 டாலர் வரையில் சம்பளம் அளிக்கப்படும் எனத் தனது வேலைவாய்ப்புப் பதவில் தெரிவித்துள்ளது,
அதே நேரத்தில் மூத்த பணியாளர் ஆய்வாளர் 142,000 டாலர் மற்றும் 200,000 டாலர் வரை சம்பாதிக்கலாம் என அறிவித்துள்ளது.
அமேசான்
அமெரிக்காவின் மிகப்பெரிய இகாமர்ஸ் நிறுவனமான அமேசான் ஒரு சீனியர் ப்ராடெக்ட் மேனேஜர் 121,000 டாலர் முதல் 235,200 டாலர் வரையில் சம்பளம் அளிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் நியூயார்க்-இல் உள்ள கார்ப்பரேட் ஆலோசகரின் சம்பள வரம்பு 172,000 டாலர் முதல் 190,000 டாலர் வரை உள்ளது.
டெலாய்ட்
இதேபோல் செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருக்கு, பட்டியலிடப்பட்ட அடிப்படை சம்பளமாக 90,000 டாலர் வரையில் அளிக்கிறது டெலாய்ட் நிறுவனம்.
இதேபோல் இந்நிறுவனத்தில் சுகாதாரக் குழுவின் ஆலோசகர் 105,000 டாலர் வரையில் சம்பளம் எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளது.'
இதேபோன்ற திட்டம் இந்தியாவிலும் எப்படி இருக்கும், உங்க பதிலை கமெண்ட் பண்ணுங்க..!


Click it and Unblock the Notifications