டெல்லி: அடுத்த ஐந்தாண்டு காலத்தில் இந்தியர்களின் தனிநபர் வருமானம் தற்போது இருப்பதை விட இரு மடங்காக உயரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கவுடிலியா பொருளாதார கருத்தரங்கில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின் படி இந்தியாவில் தனிநபர் வருமானம் 2730 டாலர்களை எட்டுவதற்கு 75 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது, ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதில் 2000 டாலர்கள் இன்னும் சேர்ந்து 4,730 டாலர்களை எட்டும் என தெரிவித்தார். அதாவது 75 ஆண்டுகளில் எட்டிய வளர்ச்சியை அடுத்த ஐந்து ஆண்டுகளிலேயே நாம் எட்ட போகிறோம் என கூறினார்.
இந்தியாவின் பொருளாதார செயல் திறன் கடந்த 10 ஆண்டுகளில் வேகம் எடுத்துள்ளது என தெரிவித்த அவர், பத்தாவது பெரிய பொருளாதரமாக இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரம் நாடாக முன்னேறி இருக்கிறது என்பதை சுட்டி காட்டினார். மேலும் வரவிருக்கும் பத்தாண்டு காலத்தில் இந்தியாவில் சாமானியர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து நிற்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வருமான சமத்துவமின்மை அளவுகோல் கிராமப்புற இந்தியாவில் 0.283இல் இருந்து 0.266 ஆகவும், நகர்ப்புறங்களில் 0.363இல் இருந்து 0.314 ஆகவும் குறைந்துள்ளது என்பதை குறிப்பிட்டார்.இந்தியாவில் பொருளாதார சமத்துவம் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கடந்த பத்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்னும் சிறப்பாக வெளிப்படும் என தெரிவித்தார். இந்திய பொருளாதாரத்தில் நுகர்வு தன்மை முக்கிய அங்கம் வகிக்கிறது என குறிப்பிட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ஜிடிபியில் இதுதான் 60 சதவீத பங்களிப்பை தருகிறது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 43 சதவீதமாக இருக்கிறது. எனவே அடுத்த 10 ஆண்டு காலத்திற்கு இந்த இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என தெரிவித்தார்.
மேலும் மிடில் கிளாஸ் வளர்ந்து வரும் மிடில் கிளாஸ் மக்கள் இந்தியாவை ஒரு சிறந்த சந்தையாகவும் வெளிநாட்டு நிறுவனங்களின் விருப்பமான முதலீட்டு நாடாகவும் மாற்றி உள்ளனர் என கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கடக்கும் போது வளர்ந்த நாடுகளை போன்றே புதிய பண்புகளை கொண்டிருக்கும் என தெரிவித்தார்.
Written by: Devika
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications