அடுத்த விக்கெட் இது தான்.. தனியார் கிரிப்டோகரன்சியால் அடுத்த நிதி நெருக்கடி வரும்.. சக்திகாந்த தாஸ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சிகள் தான் எதிர்காலம். எதிர்காலத்தில் பணத் தாள்கள் அதிகம் இருக்காது என்று கூறியவர்கள் எல்லோரும், இன்று தற்போது பெரும் மெளனம் காத்து வருகின்றனர்.

ஏனெனில் அந்தளவுக்கு கிரிப்டோகரன்சியானது நடப்பு ஆண்டில் முதலீட்டாளர்களை பாடாய்படுத்தியுள்ளன.

குறிப்பாக தனியார் கிரிப்டோகரன்சிகளில் மிக பிரபலமான, பிட்காயின் மிக மோசமான சரிவினைக் கண்டது. இன்று வரையில் மீளவே இல்லை எனலாம். இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சிகள் மீதான நம்பிக்கை என்பதை குறைத்துள்ளது. இது எதிர்காலத்தில் இன்னும் என்னவாகுமோ என்ற அச்சமே இருந்து வருகின்றது. இதற்கிடையில் சக்திகாந்த தாஸின் இந்த அறிக்கை மேற்கொண்டு நம்பிக்கையை குறைக்கலாம்.

டிஜிட்டல் ரூபாய், கிரிப்டோகரன்சி என்ன வித்தியாசம்..? டிஜிட்டல் ரூபாய்-ன் பயன் என்ன..? டிஜிட்டல் ரூபாய், கிரிப்டோகரன்சி என்ன வித்தியாசம்..? டிஜிட்டல் ரூபாய்-ன் பயன் என்ன..?

நம்பிக்கை சரிவு

நம்பிக்கை சரிவு

இதற்கிடையில் கிரிப்டோகரன்சிகள் குறித்தான மோசடிகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சிகள் மீதான நம்பிக்கையும் குறைந்துள்ளது.

இந்திய அரசும் சொந்தமாக டிஜிட்டல் கரன்சியினை அறிமுகம் செய்துள்ளது. இது மேற்கொண்டு இந்திய அரசு கிரிப்டோகரன்சிகளுக்கு முழுமையாக ஆதரவு காட்டவில்லை என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

அடுத்த நிதி நெருக்கடி

அடுத்த நிதி நெருக்கடி

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், அடுத்த நிதி நெருக்கடி என்பது தனியார் கிரிப்டோகரன்சிகளால் வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தாஸ் இன்னும் கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை இன்னும் வைத்துள்ளார் எனலாம்.

கிரிப்டோகரன்சிகளுக்கு அடிப்படை மதிப்பு என்பது இல்லை. இது மேக்ரோ பொருளாதாரம், நிதி ஸ்திரத்தன்மைகளுக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

பிரச்சனை ஏற்படுத்தலாம்

பிரச்சனை ஏற்படுத்தலாம்

பிசினஸ் ஸ்டாண்டர்டு நடத்திய BFSI Insight Summit 2022 மாநாட்டில் பேசிய சக்திகாந்த தாஸ், கிரிப்டோகரன்சிகளுக்கு அடிப்படை மதிப்பு என்பது இல்லை. இது மேக்ரோ பொருளாதாரம், நிதி ஸ்திரத்தன்மைகளுக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

 ரிசர்வ் வங்கியின் விருப்பம்

ரிசர்வ் வங்கியின் விருப்பம்

தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே ரிசர்வ் வங்கி தடை விதிக்கவே விருப்பம் தெரிவித்து வந்தது. இதற்காக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது. இது குறித்து மத்திய அரசும் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.

பல ஆயிரம் கோடிகளில் பரிவர்த்தனை செய்யும் கிரிப்டோ சந்தையை நெறிமுறைப்படுத்த வேண்டும். கிரிப்டோவை அனுமதித்தால் அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பதம் பார்த்துவிடும் என்றெல்லாம் கருத்துகள் அந்த சமயத்தில் கிளம்பின.

காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம்

அதேசமயம் கிரிப்டோகரன்சிகள் காலத்தின் கட்டாயம் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இப்படி ஒரு பக்கம் கிரிப்டோ கரன்சி சந்தை வேகமாக வளர்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் கிரிப்டோகரன்சிகள் தாறுமாறான சரிவினைக் கண்டு வந்தன.

இப்படி அடுத்தடுத்த சம்பவங்களும் கிரிப்டோகரன்சிகள் குறித்தான சமீபத்திய செய்திகள், நிச்சயம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பதம் பார்த்தது எனலாம். மொத்தத்தில் ரிசர்வ் வங்கி சொன்னதெல்லாம் உண்மை தானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

தாக்கம் இருக்கலாம்

தாக்கம் இருக்கலாம்

சமீபத்திய காலமாகவே கிரிப்டோகரன்சிகள் அதனை முதலீட்டாளார்கள் மத்தியில் அதனை உணர்த்த தொடங்கிவிட்டன. சமீப காலமாகவே பெரியளவில் ஏற்றம் காணாத நிலையில், கிரிப்டோகரன்சிகள் மீதான முதலீடுகள் வெளியேறலாம். அதோடு எஃப் டி எக்ஸ் போன்ற சம்பவங்களும் அரங்கேறலாம். இதுவும் கிரிப்டோகரன்சி சந்தையில் மட்டும் அல்ல, நிதி சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

next financial crisis may come from private cryptocurrencies: RBI' shaktikanta Das

RBI Governor Shaktikanta Das has warned that the next financial crisis will come from private cryptocurrencies.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X