ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். இந்த நிலையில் இவ்வங்கியின் அடுத்த தலைவர் அதே நாளில் பதவி ஏற்க வேண்டும், இது மட்டும் அல்லாமல் இதற்கு முன்பே அனைத்து பொறுப்புகளையும் பெற்றுக்கொள்ள ஒருவரை தேர்வு செய்தாக வேண்டும்.
இந்திய மக்களின் பெரும் பகுதி பணத்தை கையாளும் வங்கி என்பதால் எஸ்பிஐ வங்கி தலைவராக நியமிக்கப்படுபவர் திறமைசாலியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் மத்திய அரசு, புதிய அதிகாரியை தேர்வு செய்யும் பணிகளை கடந்த சில மாதங்களாக செய்தது வந்தது.

இந்த நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) தலைவர் பதவிக்கு மூன்று நபர்களை நேர்முக தேர்வு செய்த பின்னர், சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டியின் பெயரை மத்திய அரசின் சிறப்பு குழு சனிக்கிழமை பரிந்துரைத்ததுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் பதவிக்கு ஜூன் 29, 2024 அன்று மத்திய அரசின் கீழ் இயங்கும் இன்டிபென்டென்ட் அமைப்பான நிதி சேவை நிறுவனங்கள் பணியாளர் தேர்வு வாரியம் (Financial Services Institutions Bureau - FSIB) 3 விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு நேர்முக தேர்வு செய்தது.
செயல்திறன் மற்றும் அனுபவத்தை கருத்தில் கொண்டு, சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி அவர்கள் இப்பதவிக்கு தேர்வாகி இருப்பதாக FSIB அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இறுதி முடிவை மத்திய அரசு அறிவிக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய தலைவராக நியமிக்கப்படுபவர் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தினேஷ் காராவின் பதவிக்காலத்தில், எஸ்.பி.ஐயின் செயல்பாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது. இதேபோன்ற அல்லது இதை விடவும் சிறப்பான பர்பாமென்ஸ்-ஐ கொடுக்க வேண்டும்.
தினேஷ் காராவின் பதவிக்காலத்தில் எஸ்பிஐ வங்கி பங்கு விலை ரூ.250 லிருந்து ரூ.820 வரை உயர்ந்தது. எஸ்.பி.ஐயின் வளர்ச்சிப் பாதையில் அடுத்த தலைவர் சிறப்பாக வழிநடத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications