சூப்பர் பவராக மாறப்போகும் சவுதி அரேபியா.. அமெரிக்கா முதுகை காட்டிய ஒரு வாரத்தில்.. சிக்கலில் டிரம்ப் !

சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் பைப்லைன்களையும் எண்ணெய் கட்டமைப்புகளையும் தொடர்ந்து ஹவுதி படைகள் தாக்கி வரும் வேளையில், உலக நாடுகளுக்கு முக்கியமான விஷயத்தை சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

அரபு நாடுகளில் மிகவும் பணக்கார நாடாக சவுதி அரேபியா விளங்கினாலும் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தையை எண்ணெய் துறையை தாண்டி பிற துறையில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நீண்ட கால திட்டத்தை வகுத்து இருக்கும் வேளையில் ஜாக்பாட் அடித்தது போல் அந்நாட்டிற்கு சூப்பர் பவராக மாறும் பலம் கிடைத்துள்ளது.

சூப்பர் பவராக மாறப்போகும் சவுதி அரேபியா.. அமெரிக்கா முதுகை காட்டிய ஒரு வாரத்தில்.. சிக்கலில் டிரம்ப் !

ஏஐ தொழில்நுட்பம்

உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் மின்சாரம் முக்கிய தேவையாக மாறியிருக்கும் வேளையில் அடுத்த 100 வருடத்திற்கு மின்சாரம் சப்ளை செய்யும் நாடாக சவுதி அரேபியா மாறும் அளவிற்கான யூரேனியம் கனிமம் அந்நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியா தொடர்ந்து உலகின் எனர்ஜி சப்ளையராக இருக்கப்போகிறது.

110 மில்லியன் டன் யுரேனியம்

சவுதி அரேபியாவின் மதீனா பகுதியில் சுமார் 110 மில்லியன் டன் யுரேனியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சரும், இளவரசருமான அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார். நேற்று வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மாநாட்டில் இந்த தகவல் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

மதீனா பகுதியில் உள்ள Jabal Sayid திட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் புவியியல் ஆராய்ச்சிகளின் போது யுரேனியம் உலோக தாது கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது.

அரிய உலோக தாது

மேலும் இந்த ஆராய்ச்சியில் தற்போது உலக நாடுகளில் முக்கிய தேவையாக இருக்கும் Rare Earth Elements மற்றும் Heavy Rare Earth Elements எனப்படும் இன்றைய தொழிற்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் இப்பகுதியில் இருப்பதாக அமைச்சர் அப்துல்அசிஸ் கூறியுள்ளார்.

இதேபோல் உலக நாடுகளில் போர் அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் அணுசக்தி என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்பதால் இந்த 110 மில்லியன் டன் யுரேனியத்தை அனுசக்திக்காகவும் மேம்படுத்த முடியும். ஈரான் தற்போது தனது அணுசக்தி வைத்து தான் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் சவால் விட்டு வருகிறது.

சவுதி பொருளாதாரத்தின் போக்கு

கச்சா எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருக்கும் சவுதி நாட்டின் பொருளாதாரத்தின் போக்கை மாற்றி தற்போது எரிசக்தி மற்றும் கனிம வளங்களில் முதலீட்டை அதிகரிப்பது என்பது சவுதியின் நீண்டகால திட்டமாக இருந்து வருகிறது. இதற்கு ஏற்றார்போல் சவுதி அரேபியாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அமெரிக்கா களம் 8ல்

இந்த மாபெரும் அறிவிப்பை வெளியிடும் முன்பே அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவும் ஜூலை மாதத்தில் அணுசக்தி திட்டம் தொடர்பான ஒரு முக்கிய ஒப்பந்தத்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளும் மதீனா-வில் இருக்கும் தாதுவை சுத்திகரித்து யுரேனியத்தை அணுசக்தி திட்டத்திற்கும், அரிய உலோகத்தை இதர முக்கிய துறைக்கும் பயன்படுத்தப்படும். இதற்காக இரு நாடுகளும் பெரிய அளவில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது.

சீனாவின் அரிய உலோக ஆதிக்கம்

அரிய உலோக ஆதிக்கத்தை வைத்து தான் சீனா அமெரிக்காவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்த நிலையில் தற்போது சவுதி மூலம் அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதைவிட முக்கியமான விஷயம் 110 மில்லியன் டன் தாதுவில் யுரேனியமும், அரிய உலோகமும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதும் சுத்திகரிப்பு பணியின்போது தான் தெரிய வரும்.

அமெரிக்கா - சவுதி விரிசல்

இதேவேளையில் கடந்த வார துவக்கத்தில் ஹவுதி படைகள் மீது அமெரிக்காவை தாக்குதல் நடத்தி அடக்குமாறு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் டிரம்ப்-க்கு 2 முறை போன் கால் செய்துள்ளார். ஆனால் டிரம்ப் அழைப்பை ஏற்கவில்லை, இதேவேளையில் அமெரிக்க அதிகாரிகள் முகமது பின் சல்மான்-க்கு ஹவுதிக்கள் மீது தாக்குதல் நடத்தவும், ஹவுதிக்கள் விவகாரத்தில் தலையிடவும் எவ்விதமான திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இது இருநாடுகள் மத்தியிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த மாபெரும் திட்டத்தை எப்படி இரு நாடுகளும் இணைந்து செய்யும் என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.

சீனா களம் 8ல் போட்டிப்போடுமா?

இதேவேளையில் சுரங்கம், சுத்திகரிப்பில் உலகளவில் கிங்மேக்கராக இருக்கும் சீனா சவுதியில் இறங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வருட துவக்கத்தில் சவுதி அரேபியாவில் செய்யப்பட்ட சுரங்க பணிகளுக்கான ஆய்வில் அந்நாட்டின் நான்கு இடங்களில் மொத்தம் 78 லட்சம் அவுன்ஸ் அதாவது சுமார் 242.6 டன் தங்க உலோகத்தின் தாதுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+