பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தபின் அடுத்த பிரிட்டன் பிரதமர் போட்டியில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் தற்போது களத்தில் உள்ளனர்.
இந்த இருவரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை லிஸ் டிரஸ் முன்னணியில் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மீண்டும் முன்னேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்வு கடும் இழுபறியில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
லிஸ் டிரஸ் vs ரிஷி சுனக்
பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து அவருக்கு பதிலாக பிரதமர் வேட்பாளர்களில் முன்னணியில் உள்ள வெளியுறவு செயலர் லிஸ் டிரஸ், கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கணிப்பின்படி, தனது போட்டியாளரான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை விட சிறிய அளவில் முன்னணியில் உள்ளார்.
கருத்துக்கணிப்பு
ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி 807 பேர்களில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் அவர்களுக்கு 43% ஆதரவும், லிஸ் டிரஸ் அவர்களுக்கு 48% ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த வித்தியாசம் வரும் நாட்களில் இன்னும் குறைந்தால் ரிஷி சுனக்கிற்கு அடுத்த பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி வாக்கெடுப்பு
சுமார் 200,000 கன்சர்வேடிவ் உறுப்பினர்களின் வாக்குகளை சேகரிக்க சுனக் மற்றும் டிரஸ் ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரம் செய்ய சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். செப்டம்பர் 5 ஆம் தேதி கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் புதிய பிரதமரை தேர்வு செய்ய வாக்களிக்க உள்ளனர்.
சுனக்- டிரஸ் வாக்குறுதிகள்
இந்த தேர்தலில் முக்கிய விஷயமாக பார்க்கப்படுவது என்னவெனில் இருவருமே கொடுக்கும் வரி குறித்த வாக்குறுதிகள் தான். டிரஸ் தான் பதவிக்கு வந்தால் பெரும் வரி குறைப்புக்களை கையாள்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் சுனக், ' வரிகளை குறைக்கும் முன் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
கன்சர்வேடிவ் உறுப்பினர்கள்
தற்போதைய நிலையில் கன்சர்வேடிவ் உறுப்பினர்களில் 60% க்கும் அதிகமானோர் சுனக்கை விட வரிகள் குறித்து ட்ரஸ் யோசனை சிறப்பாக இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பணவீக்கத்தை சமாளிப்பதற்கும் குடியேற்றத்தை கையாள்வதற்கும் சுனக்கின் திட்டம் சிறப்பானது என்றும் கூறி வருகின்றனர். சுனக் அதிக நம்பிக்கை கொண்டவர் என்றும் கல்வியில் சிறந்த கொள்கைகளை கொண்டிருப்பவர் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடும் போட்டி
ஸ்ட்ராத்க்லைட் பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியரும், பிரிட்டனின் முன்னணி வாக்கெடுப்பு நிபுணர்களில் ஒருவருமான ஜான் கர்டிஸ் இதுகுறித்து கூறியபோது, 'போட்டி இன்னும் முடிந்துவிட்டதாக தெரியவில்லை என்றும் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறினார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications