சென்னை: 2023-24 நிதியாண்டில் 22 மாநிலங்களில் உள்ள நெடுஞ்சாலை டோல் பிளாசாக்களில் மொத்தம் ரூ.55,844 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நித்தின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நித்தின் கட்கரி, நாட்டில் வசூலிக்கப்பட்ட மொத்த டோல் கட்டண வருவாயின் விவரங்களைப் பகிர்ந்துள்ளார். இந்தியா முழுவதும் 983 டோல் பிளாசாகள் செயல்பட்டு வருவதாகவும், இதில் தமிழ்நாட்டில் உள்ள 3,109 கிலோமீட்டர் சாலையில், 67 டோல் பிளாசாகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 2023-24 நிதியாண்டில் தமிழ்நாட்டில் மொத்த வசூலிக்கப்பட்ட தொகை 4,221 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது நாட்டின் மொத்த டோல் கட்டண வசூலில் தமிழ்நாட்டில் பங்கு மட்டும் மொத்தம் 7.5 சதவீதம். மேலும், 22 மாநிலங்களில் வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகை, செயல்படும் டோல் பிளாசாகளின் எண்ணிக்கை மற்றும் நெடுஞ்சாலையின் நீளம் ஆகியவற்றின் விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த கட்டணம் ஏஜென்சிகள் மூலம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண முறை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரு வாகனம் பயணம் செய்யும் தூரத்தின் அடிப்படையில் வாகனங்களுக்குக் கட்டணம் விதிக்கும் புதிய ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண முறை இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
இந்த புதுமையான முறை முதலில் மைசூர்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் வழியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு எளிதான கட்டண முறை கிடைக்கும். மேலும், டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை 48-ல் இந்த தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலைகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை விரைவில் தொடங்க பணிகள் நிறைவடைந்துள்ளன. டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை அதிக தூரம் கொண்டதாக இருப்பதால், வாகனங்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கட்டணத்தைத் துல்லியமாக கணக்கிட மத்திய நெடுஞ்சாலைத்துறை geofencing அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே நாட்டில் 18 லட்சம் வர்த்தக வாகனங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான வாகன இருப்பிடத்தைக் கண்காணிக்கும் டிராகிங் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் முதலில் இந்த வாகனங்களுக்கு மட்டுமே ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் வாகன உரிமையாளர்கள் கட்டண செலுத்தும் திறன் மற்றும் துல்லியம் அதிகரிக்கும். இந்த புதிய முறையை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கு முன்பு பல்வேறு சாலைகளில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.




More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications