ரூ.20 கோடி வசூல்.. தவறாகப் பாஸ்ட் டேக் வழியில் வந்தவர்கள் மீது அபராதம்..!

தேசிய நெடுஞ்சாலைத் துறை இந்தியா முழுவதும் வேகமாகப் போக்குவரத்து முறையை அமலாக்கம் செய்யும் விதமாக இருசக்கர வாகனங்களைத் தவிர அனைத்து வாகனங்களும் பாஸ்ட் டேக் முறையைக் கொண்டு வந்தது. பல எதிர்ப்புகள், பிரச்சனைகளைத் தாண்டி டிசம்பர் மாதம் நாடு முழுவதும் அனைத்து சுங்க சாவடியிலும் பாஸ்ட் டேக் முறையும், பாஸ்ட் டே கொண்ட வாகனங்கள் செல்ல பிரத்தியேக வழித்தடத்தையும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் பாஸ்ட் டேக் வழியில் பயணித்தால் இரட்டிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் என அபராதமும், விதிக்கப்பட்டு இருந்தது. எத்தனை பேர் அபராதம் செலுத்தியுள்ளார்கள் தெரியுமா.. கேட்டா சும்மா ஆடிப்போயிருவீங்க.

குறிக்கோள்

குறிக்கோள்

டிசம்பர் மாதம் துவங்கிய இப்புதிய கட்டுப்பாடுகள் நாட்டு மக்களைப் பெரிய அளவில் பாதித்த அதேவேளையில் நெடுஞ்சாலைத் துறையின் தடையில்லா மற்றும் வேகமான போக்குவரத்து குறிக்கோள் எட்டப்பட்டதாக இன்று வரையில் தெரியவில்லை. இன்னமும், வார இறுதி நாட்கள், ஒரு நாளில் அதிக வாகனங்கள் கடக்கும் நேரங்களில் சுங்க சாவடியில் நின்று தான் செல்ல வேண்டி உள்ளது.

20 கோடி ரூபாய்

20 கோடி ரூபாய்

நிதின் கட்கரி தலைமையிலான தேசிய நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பின் படி நாடு முழுவதும் பாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் பாஸ்ட் டேக் வழியில் பயணித்த 18 லட்சம் வாகனங்களிடம் இரட்டிப்புக் கட்டணம் வசூலித்துள்ளது. இந்த அபராதத்தின் வாயிலாக மட்டும் தேசிய நெடுஞ்சாலை துறை சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

விநியோகம்

விநியோகம்

நாடு முழுவதும் சுமார் 1.55 கோடி பாஸ்ட் டேக்கள் வாகனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதோடு தொடர்ந்து பாஸ்ட் டேக் பயன்பட்டை அதிகரிக்க அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் திட்டங்கள் தீட்டப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது விநியோகம் செய்துள்ள் 1.55 கோடி பாஸ்ட் டேக்கள் மூலம் தினமும் 40 லட்ச வாகனங்கள் இதைப் பயன்படுத்துகிறது.

 

இலவசம்

இலவசம்

வாகன உரிமையாளர்கள் அனைவரும் பாஸ்ட் டேக் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய நெடுஞ்சாலை துறை பாஸ்ட் டே கட்டணத்தில் 100 ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது. இந்தச் சலுகை பிப்ரவரி 12 2020 முதல் பிப்ரவரி 29 வரையில் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+