ஸ்மால்கேப் பிரிவை சேர்ந்த நிபே லிமிடெட் நிறுவனம் பாதுகாப்பு துறைக்கான தயாரிப்புகளை தயாரித்து வருகிறது. பென்னி பங்குகளில் முதலீடு செய்வதில் அதிக ரிஸ்க் உள்ளது என்றாலும், நல்ல பென்னி பங்கினை தேர்வு செய்து, நியாயமான விலையில் வாங்கினால் நல்ல ஆதாயம் பெறலாம். அதற்கு உதாரணமாக ஒரு காலத்தில் பென்னி பங்காக இருந்த நிபே லிமிடெட் நிறுவன பங்கினை குறிப்பிடலாம்.
கடந்த 5 ஆண்டுகளில் நிபே லிமிடெட் பங்கு முதலீட்டாளர்களுக்கு 10,934 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2020 பிப்ரவரியில் ரூ.11.60ஆக இருந்த இப்பங்கின் விலை தற்போது ரூ.1,280 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1.10 கோடியாக உயர்ந்திருக்கும்.

நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை வழங்கியுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டில் இப்பங்கின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது. கடந்த ஜூலை 8ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தக்தின் இடையே இப்பங்கின் 52 வார புதிய உச்சமான ரூ.2245.40ஆக இருந்தது.
கடந்த வருடம் நிபே லிமிடெட் பங்கு விலை 9 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், நிபே பங்குக்கு இந்த ஆண்டு மோசமான காலமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இந்நிறுவன பங்கின் விலை 30 சதவீதம் சரிவு கண்டுள்ளது. கடந்த ஜனவரியில் மட்டும் 15 சதவீதம் வீழ்ச்சி கண்டது.
2024 அக்டோபர் முதல் இந்நிறுவன பங்கின் விலை சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து 5வது மாதமாக பிப்ரவரியிலும் இந்நிறுவன பங்கு (இதுவரை 18 சதவீதம்) சரிவை சந்தித்துள்ளது.
நிபே லிமிடெட் 2024 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1.93 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலண்டைக் காட்டிலும் 56.23 சதவீதம் குறைவாகும். 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.4.41 கோடி ஈட்டியிருந்தது.
2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 137.16 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.148.68 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.62.69 கோடி ஈட்டியிருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செலவினம் 151.74 சதவீதம் அதிகரித்து ரூ.148.38 கோடியாக உயர்ந்துள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications