ஜனவரி 3ஆம் தேதி அன்று அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு பிரிவினர் வெனிசுலா தலைநகர் கராகஸில் நுழைந்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவருடைய மனைவியையும் சிறை பிடித்து நாடு கடத்தினர்.
ஊழல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான் அமெரிக்காவால் கைது செய்யப்படுவோம் என்பது முன்கூட்டியே மதுரோ அறிந்திருந்தாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஏனெனில் அவர் மிகவும் ஸ்மார்ட்டான முறையில் தன்னுடைய சொத்துக்களை பிட்காயின்களாக மாற்றியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தி ஃபார்ச்சூன் இதழ் நிக்கோலஸ் மதுரோ 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை Shadow Reserve எனப்படும் நிழல் சொத்தாக வைத்திருக்கிறார் என செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா அரசாங்கம் வெனிசுலா நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்திருந்தது. இந்த பொருளாதார தடைகளில் இருந்து தப்பிப்பதற்கு பிட்காயின்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார் மதுரோ என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரோ வசம் 6 லட்சம் பிட்காய்கள் இருப்பதாகவும் இதன் மதிப்பு 56 முதல் 60 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க அரசாங்கம் வெனிசுலா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக்கியது. இந்த பொருளாதார தடைகளில் இருந்து மீண்டு வருவதற்கு வெனிசுலா அரசாங்கம் கிரிப்டோ கரன்சிகளை தான் ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியது.
அமெரிக்காவின் பொருளாதார தடையால் வெளிநாடுகளில் இருந்து சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகளின் எந்த நாணயங்களையும் பயன்படுத்தி தங்கள் வசம் இருக்கும் கச்சா எண்ணெயை விற்க முடியவில்லை, எந்த நாடுகள் உடனும் வணிகம் செய்ய முடியவில்லை. எனவே மதுரோ தலைமையிலான அரசு கிரிப்டோ நாணயங்கள் மூலம் வர்த்தகம் செய்துள்ளது என்கிறது ஃபார்ச்சூன் செய்தி. 2020களில் மத்தியில் உலக அளவில் அதிக அளவில் கிரிப்டோ கரன்சி பயன்படுத்தக்கூடிய நாடுகளில் வெனிசுலா முன்னிலை இடத்தை வகித்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் வெனிசுலா அரசே 2018 ஆம் ஆண்டு பெட்ரோ என்ற டிஜிட்டல் டோக்கனை அறிமுகம் செய்தது. இது அந்நாட்டின் எண்ணெய் வளங்களை விற்பனை செய்து வருவாய் பார்ப்பதற்கான ஒரு டிஜிட்டல் டோக்கனாக பயன்படுத்தப்பட்டது. அதாவது டாலரில் இல்லாமல் கிரிப்டோவில் வர்த்தகம் செய்துள்ளனர். ஓவர்சீஸ் நெட்வொர்க் மூலம் டோக்கன்களை கிரிப்டோ நாணயங்களாக மாற்றி சேமித்துள்ளனர்.
அதே போல நாட்டில் இருந்த தங்கத்தையும் விற்பனை செய்துள்ளனர். இவற்றில் இருந்து கிடைத்த வ்ருமானத்தை பிட்காயினில் மதுரோ முதலீடு செய்துள்ளார்.அமைச்சர்கள் இதற்கு உடந்தையாக இருந்தனர் என சொல்லப்படுகிறது. பொருளாதார தடைகளை எதிர்கொள்ள இந்த செயலில் மதுரோ இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமெரிக்க அரசாங்கம் மதுரோவின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது . இதற்கிடையே ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி மதுரோ ஆட்சியில் வெனிசுலா நாட்டின் மத்திய வங்கியில் இருந்து 113 மெட்ரிக் டன்கள் தங்கம் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. 2013 ஆம் ஆண்டு மதுரோ அதிபர் பதவி ஏற்றது தொடங்கி, 2016 ஆம் ஆண்டு வரை இந்த தங்கம் சுவிட்சர்லாந்து அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூலம் இவை மாற்றப்பட்டு வெவ்வேறு நாடுகளுக்கு விற்று பணமாக்கப்பட்டதாம். இந்த பணத்தை கொண்டு 2018ஆம் ஆண்டில் பிட்காயின்களை வாங்கி இருப்பு வைக்க தொடங்கியுள்ளனர். பிட்காயின்கள் எந்த நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராது என்பதால் இந்த வழிமுறையை பின்பற்றியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மதுரோ இவ்வளவு பிட்காயின்கள் வைத்திருப்பதற்கான பிளாக் செயின் ஆதாரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதே வேளையில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்கு முந்தைய நாளே மதுரோ தங்கம் உள்ளிட்டவற்றை ரஷ்யாவுக்கு அனுப்பியதாக ஒரு தகவல் பரவுகிறது. ஆனால் அதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.
More From GoodReturns

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications