அமெரிக்க ராணுவம் சனிக்கிழமை அன்று அதிரடியாக வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவருடைய மனைவியையும் சிறை பிடித்து நாடு கடத்தி இருக்கிறது. உலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்படும் விஷயமாக அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கை அமைந்திருக்கிறது.
நீண்ட காலமாக வெனிசுலா நாட்டின் அசைக்க முடியாத ஒரு தலைவராக திகழ்ந்து வருகிறார் நிக்கோலஸ் மதுரோ. பேருந்து ஓட்டுநராக இருந்து நாட்டின் அதிபராக உயர்ந்தவர் .1962 ஆம் ஆண்டு ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். பின்னர் பேருந்து ஓட்டுனராக பணி புரிந்த போது போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைக்காக ஒரு யூனியனை தொடங்கினார். இதுதான் அவர் அரசியலில் கால் பதித்து வளர்ச்சி அடைவதற்கு மிக முக்கியமான காரணம்.

பின்னர் புரட்சியாளர் ஹியூகோ சாவேஸின் நெருங்கிய வட்டத்தில் இணைந்து அரசியல் கற்றார். சாவேஸின் ஆட்சியில் வெளியுறவு துறை அமைச்சர், துணை அதிபர் போன்ற முக்கிய பதவிகள் இவருக்கு வழங்கப்பட்டன .2013 ஆம் ஆண்டு சாவேஸின் மறைவுக்கு பிறகு அதிபராக பொறுப்பேற்றார். நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக தற்போது அவரை கைது செய்து விட்டது. நிக்கோலஸ் மதுரோவுக்கும் இந்தியாவுக்குமான மிக முக்கியமான ஒரு தொடர்பு குறித்த தகவல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிக்கோலஸ் மதுரோ இந்தியாவின் சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தர்.
நிக்கோலஸ் மதுரோவின் மனைவி முதன்முதலில் சத்யசாய்பாபாவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அவரின் பக்தரானார். பின்னர் படிப்படியாக மதுரோவும் சாய்பாபாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். தங்களுக்கு கடினமான காலம் வரும் போதெல்லாம் சாய்பாபாவின் போதனைகளே நிலைமையை கையாள உதவியது என இருவருமே தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச மாநிலம் புட்டபருத்திக்கு நிக்கோலஸ் மதுரோ தன்னுடைய மனைவியுடன் வருகை தந்தார். அங்கே உள்ள பிரசாந்தி நிலையத்திற்கு சென்று சாய்பாபாவின் உரைகளை அவர்கள் கேட்ட புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
நிக்கோலஸ் மதுரோவின் அதிபர் அலுவலகத்தில் சாவேஸ் போன்ற புரட்சித்தலைவர்களின் படங்களோடு சாய்பாபாவின் பெரிய படமும் வைக்கப்பட்டிருந்தது . அனைவரையும் நேசிக்க வேண்டும் என்ற சாய்பாபாவின் போதனைகளின் தான் பின்பற்றுவதாக அடிக்கடி கூறியிருக்கிறார் நிக்கோலஸ் மதுரோ. சாய்பாவா மறைந்த போது வெனிசுலாவில் துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.கடந்த நவம்பரில் ஒரு அரசு உரை சாய்பாபாவை சந்தித்ததை நான் இன்னும் மறக்க மாட்டேன், அவரின் போதனைகள் தொடர்ந்து நம்மை வழி நடத்தும் எனக் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

தொடர்கிறது ஈரான் போர்!! நாளை காலை 10 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது என அறிவித்த டிரம்ப்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications