LIC-க்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு..? அப்போ மக்களின் நிலை..? 2008க்குப் பிறகு படு மோசமான நிலை..!

பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. ஐடி துறை பங்குகளுக்கும் மக்களுக்கு லைப் இன்சூரன்ஸ் சேவை அளிக்கும் LIC நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி பலருக்கம் இருக்கும். மக்கள் செல்லும் இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகையில் பெரும் பகுதியை எல்ஐசி பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. இதில் கிடைக்கும் லாபத்தை வைத்து தான் இன்சூரன்ஸ் தொகையை மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தால் எல்ஐசி நிறுவனத்தின் முதலீட்டு மதிப்பும் பாதிக்ப்படும்.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி பங்குகளை டிராக் செய்யும் நிஃப்டி ஐடி குறியீடு இந்த மாதம் மட்டும் 21% வீழ்ச்சியடைந்துள்ளது. இது 2008 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு பதிவான மிக மோசமான சரிவாகும். ஒரே மாதத்தில் 21% சரிவு என்பது பங்குச்சந்தையில் மிகக் கடுமையானது. இந்த மோசமான சரிவுக்கு பின்பு ஏஐ தொழில்நுட்பமும், ஆந்த்ரோபிக் என்ற நிறுவனமும் முக்கிய காரணமாக உள்ளது.

LIC-க்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு..? அப்போ மக்களின் நிலை..? 2008க்குப் பிறகு படு மோசமான நிலை..!

ஏன் சாதாரண மக்கள் கவலைப்பட வேண்டும்?
ஐடி பங்குகளில் அதிக முதலீடு செய்துள்ளவை பெரிய நிறுவனங்கள் அல்ல. பொதுமக்களின் சேமிப்புகளை நிர்வகிக்கும் எல்ஐசி (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) மற்றும் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற நிறுவனங்களே முக்கிய முதலீட்டாளர்கள்.

எல்ஐசியில் செலுத்தப்படும் காப்பீட்டு கட்டணங்களும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும் எஸ்ஐபி தொகைகளும் இந்த பங்குகளில் தான் பெரும்பாலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஐடி பங்குகள் சரிந்ததால், இந்த நிறுவனங்களின் முதலீட்டு மதிப்பும் கடுமையாக குறைந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் எல்ஐசி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் சேர்த்து ரூ.1.18 லட்சம் கோடி அளவுக்கான முதலீட்டு மதிப்பை ஐடி பங்கு முதலீட்டின் வாயிலாக இழந்துள்ளது. இதன் பொருள், பங்கு விலை குறைந்ததால் முதலீட்டின் சந்தை மதிப்பு குறைந்துள்ளது. பங்குகளை குறைந்த விலைக்கு விற்றால் மட்டுமே இது நிஜ இழப்பாக மாறும், எனவே தற்போது பதிவாகியுள்ள ரூ.1.18 லட்சம் கோடி இழப்பு என்பது வெறும் காகித இழப்பு மட்டுமே.

LIC-க்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு..? அப்போ மக்களின் நிலை..? 2008க்குப் பிறகு படு மோசமான நிலை..!

மியூச்சுவல் ஃபண்டுகள் மீது தாக்கம்
ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, முன்னணி ஐடி பங்குகளில் மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.3,55,600 கோடி முதலீடு செய்திருந்தன. ஆனால் பிப்ரவரி 24ஆம் தேதியளவில் அதே முதலீட்டின் மதிப்பு ரூ.2,80,933 கோடியாக குறைந்தது. அதாவது நான்கு வாரங்களுக்குள் ரூ.74,666 கோடி மதிப்பு சரிந்துள்ளது.

இதனால் உங்கள் எஸ்ஐபி தொகை முழுவதும் இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. தற்போதைய சந்தை விலையால் மதிப்பு குறைந்துள்ளது என்பதையே குறிக்கிறது. சந்தை மீண்டால், மதிப்பும் மீள வாய்ப்பு உள்ளது.

LIC-க்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு..? அப்போ மக்களின் நிலை..? 2008க்குப் பிறகு படு மோசமான நிலை..!

எல்ஐசி நிலைமை என்ன?
டிசம்பர் காலாண்டு பங்குதாரர் விவரங்களின்படி, இந்தியாவின் முன்னணி 10 ஐடி நிறுவனங்களில் எல்ஐசியின் முதலீட்டு மதிப்பு ரூ.2,11,257 கோடியாக இருந்தது. தற்போதைய சரிவுக்கு பின் அது ரூ.1,67,939 கோடியாக குறைந்துள்ளது. இதனால் ரூ.43,318 கோடி அளவுக்கு காகித இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கைகள் மாறுமா?
ஆம். பிப்ரவரி மாதத்தில் எல்ஐசி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் கூடுதல் பங்குகளை வாங்கியிருக்கலாம் அல்லது சில பங்குகளை விற்றிருக்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் அடுத்த மாதம் வெளியாகும். எல்ஐசியின் பங்கு வைத்திருப்பு விவரங்கள் ஏப்ரலில் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகளில் தெளிவாகும். தற்போது உள்ள தகவல்கள் முந்தைய வெளியீடுகள் மற்றும் நடப்பு சந்தை விலைகளின் அடிப்படையிலானவை.

அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள்

எல்ஐசி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் மிகப்பெரிய முதலீடுகள் இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் நிப்டி ஐடி குறியீட்டின் முக்கிய பங்குகளாக இருப்பதால், அவற்றின் பங்கு விலை சரிவு மொத்த முதலீட்டு மதிப்பையும் நேரடியாக பாதிக்கிறது. இதேபோல் எல்ஐசி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் டெக் மஹிந்திரா, எல்டிஐ மைண்டுட்ரீ, ஹெச்சிஎல், Persistent Systems, Coforge ஆகிய நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளது.

2008க்கு இணையான அதிர்ச்சி?
தற்போதைய நிப்ஃடி ஐடி குறியீட்டின் 21% வீழ்ச்சி, 2008 செப்டம்பர் மாத சரிவுடன் ஒப்பிடப்படுகிறது. மொத்தத்தில், ஐடி துறையின் கடுமையான சரிவு எல்ஐசி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீட்டு மதிப்பை தற்காலிகமாக குறைத்துள்ளது. ஆனால் இது உடனடி நிஜ இழப்பாக மாறவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+