அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள் ரத்தக்களறியாக காட்சி தருகின்றன. குறிப்பாக இந்த பங்குச்சந்தை வீழ்ச்சியில் இந்திய ஐடி நிறுவனங்களே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென் செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதற்கு ஐடி நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்ததே முக்கிய காரணமாகும்.

நிஃப்டி ஐடி இண்டெக்ஸின் மதிப்பு 7 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி அன்று தொடக்கத்திலேயே இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் தான் வர்த்தகத்தை தொடங்கின. குறிப்பாக ஐடி பங்குகள் பெரிய அளவில் சரிவடைந்துள்ளன. சுமார் ஏழு சதவீதம் வரை ஐடி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.
இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களையே சார்ந்து இருக்கின்றன. டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை, அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லலாம் என்ற கணிப்புகள் உள்ளிட்டவை காரணமாக இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளன.
காலை 9.15 மணி அளவில் நிஃப்டி ஐடி ஏழு சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஐடி இன்டெக்ஸ்லில் மிட் கேப் நிறுவனங்களான எம்பேசிஸ் மற்றும் கோபோர்ஜ் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் 6 முதல் 9 சதவீதமும் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 சதவீதமும் சரிவை சந்தித்தது. இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களின் வருவாய் அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஐடி சேவைகளின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது. எனவே இந்த ஐடி நிறுவனங்களின் பிராஜெக்டுகள் மற்றும் வருமானம் பெரும்பாலும் அமெரிக்கா நிறுவனங்களைத் தான் சார்ந்து இருக்கின்றன என்பதாலேயே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து கவலைப்பட போவதில்லை என தெரிவித்துள்ளார். அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்கனவே 6 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் எந்த ஒன்றும் வீழ்ச்சியடைய வேண்டும் என நான் விரும்பவில்லை ஆனால் சில சமயங்களில் சில விஷயங்களை சரி செய்ய நாம் மருந்து எடுத்தாக வேண்டி இருக்கிறது என கூறியிருக்கிறார்.
திங்கட்கிழமை பொறுத்தவரை பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளும் வீழ்ச்சியில் தான் வர்த்தகத்தை தொடங்கின. எஸ்&பி 500 பியூச்சர்ஸ் 4.31 சதவீதம் குறைந்துள்ளது, நாஸ்டாக் பியூச்சர்ஸ் 5.45 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது . ஜப்பானின் நிக்கி 7. 8 சதவீதம் குறைந்து 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பெரிய சேவை சந்தித்திருக்கிறது , தென்கொரியா பங்குச் சந்தை 4.6 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications