டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கும் பணியில் உலகில் பல நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியா சில நாட்களுக்கு முன்பு இதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் வர்த்தகம், பொருளாதாரம் எனப் பல பிரிவில் இந்தியாவை விடவும் சிறிய நாடான நைஜீரியா வருகிற அக்டோபர் மாதம் டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
நைஜீரியா-வின் டிஜிட்டல் நைய்ரா
சமீபத்தில் சீனா டிஜிட்டல் யுவான், ஐரோப்பா டிஜிட்டல் யூரோ அறிமுகம் செய்த நிலையில் தற்போது நைஜீரியா டிஜிட்டல் நைய்ரா அதாவது ஈ-நைய்ரா நாணயத்தை வெளியிட உள்ளதாக நைஜீரியா நாட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நைஜீரியா மத்திய வங்கி
இந்த அறிவிப்பை நைஜீரியா மத்திய வங்கியின் தலைவர் காட்வின் இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற டிஜிட்டல் நாணயம் போல் அல்லாமல் இது பரிமாற்றம் செய்ய மிகவும் எளிதாக இருக்கும் என்றும், நீண்ட காலமாக இதற்காக அரசு உழைத்து வருவதாகக் காட்வின் தெரிவித்துள்ளது.
ஈ-நைய்ரா
மேலும் நைஜீரியாவில் தற்போது ஈ-நைய்ரா தவிர அனைத்து டிஜிட்டல் நாணயம் மற்றும் கிரிப்டோகரன்சியை அரசு கட்டுப்படுத்தவும் இல்லை, பாதுகாப்பும் அளிக்கவில்லை, அதேபோல் மற்ற கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யத் தடை ஏதுமில்லை எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஈ-நைய்ரா பணப் பரிமாற்றம்
இந்த ஈ-நைய்ரா மக்களின் வங்கி கணக்குடன் இணைந்து செயல்படும், பணத்தை ஈ-நைய்ரா-வாக மாற்ற விரும்பினாலும், ஈ-நைய்ரா மூலம் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் எளிதாகச் செய்துகொள்ள முடியும் என நைஜீரியா மத்திய வங்கியின் தலைவர் காட்வின் இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்கு
மேலும் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மொத்தமாக டிஜிட்டல் நைய்ரா-வாக மாற்றவும் வழிவகைச் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மக்கள் கட்டாயம் வங்கியை அணுகி இந்த மாற்றத்தை செய்துகொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications