உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் தினமும் புதிதாக முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எந்த நாட்டு மக்கள் அதிகளவில் கிரிப்டோகரன்சியைச் சொந்தமாக வைத்துள்ளார்கள் என்பது குறித்து ஃபைன்டர் என்னும் நிறுவனம் முக்கியமான ஆய்வை செய்தது.
இந்த ஆய்வில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல விஷயங்கள் வெளியாகியுள்ளது.
ஃபைன்டர் நிறுவனம்
ஃபைன்டர் நிறுவனம் செய்த ஆய்வில் கிரிப்டோகரன்சியை வைத்துள்ளதாக அதிகம் கூறியவர்கள் பட்டியலில் நைஜீரியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
ஆய்வு
ஃபைன்டர் நிறுவனம் இந்த ஆய்வை 22 நாடுகளைச் சேர்ந்த 41,000 மக்களிடம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் கிரிப்டோகரன்சி-யின் வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாட்டு அளவீட்டைக் கணிக்கத் தான் இந்த ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
ஜப்பான் இந்தியா
மேலும் இந்த ஆய்வில் ஜப்பான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது, அதாவது ஆய்வில் பங்குபெற்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே கிரிப்டோகரன்சியை முதலீடு செய்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதேபோல் இந்தியா 15.4 சதவீதத்துடன் 7வது இடத்தைப் பிடித்துள்ளது.
கிரிப்டோகரன்சி
மேலும் சந்தையில் கிரிப்டோகரன்சிகள் கொட்டிக்கிடந்தாலும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகப் பிட்காயின் உள்ளது. மேலும் பிட்காயினை அதிகம் விரும்பு நாடுகளில் ஜப்பான் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் ஆகியவை அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
பிட்காயின், எதிரியம், டோஜ்காயின்
பிட்காயினைத் தொடர்ந்து எதிரியம், டோஜ்காயின் ஆகியவை முக்கியக் கிரிப்டோகரன்சியாக மக்கள் மத்தியில் உள்ளது. மேலும் இந்த ஆய்வில் பதில் அளித்த இந்தியர்களில் 48 சதவீத பெண்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சீனா தடை
சமீபத்தில் சீனா அனைத்து கிரிப்டோகரன்சி நடவடிக்கைகளைத் தடை செய்துள்ள நிலையில் இந்தத் தரவுகள் மாறுபட்ட கோணத்தைக் காட்டுகிறது. மேலும் கிரிப்டோகரன்சி மதிப்பில் பெரும் மாற்றத்தைச் சந்தித்து வரும் நிலையில் இன்று முக்கியக் கிரிப்டோகரன்சியின் விலை நிலவரம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
இன்றைய கிரிப்டோகரன்சி விலை
பிட்காயின் - 62,495 டாலர் (0.67 சதவீத சரிவு), எதிரியம் - 4,201.42 டாலர் (1.68 சதவீத உயர்வு), ரிப்பிள் - 1.11 டாலர் (2.18 சதவீத உயர்வு), கார்டானோ - 2.17 டாலர் (1.33 சதவீத உயர்வு), போல்காடாட் - 43.92 டாலர் (0.90 சதவீத உயர்வு), டோஜ்காயின் - 0.270 டாலர் (2.74 சதவீத உயர்வு).


Click it and Unblock the Notifications