நாம் அனைவரும் சில சமயங்களில் ரயிலில் பயணம் செய்திருப்போம். ஆனால் அவ்வாறு செய்யும்போது சில விதிமுறைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது முக்கியம். ரயில்வே விதிமுறைகளை மீறுவது, கவனக்குறைவாக ரயிலில் நடந்து கொள்வது அபராதத்துக்குரிய செயலாக கருதப்படுகிறது. இந்த விதிகளை மீறினால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை கூட விதிக்கப்படலாம். பாதுகாப்பான மற்றும் தொந்தரவு இல்லாத பயணத்திற்கு நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விதிகள் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.
வெடிப்பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது: ரயில்களில் பயணம் செய்யும்போது வெடிப்பொருட்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. இது ரயில்வே விதிமுறைகளை மீறும் செயலாகும்.

நீங்கள் பட்டாசு, மண்ணெண்ணெய். பெட்ரோல் அல்லது கேஸ் சிலிண்டர்கள் போன்ற பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164-இன் கீழ் இதற்கு ரூ.1000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
இரவில் தொந்தரவு செய்யாதீர்கள்: பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் ஓய்வெடுப்பதை உறுதிசெய்ய, TTE-கள் இரவில் டிக்கெட்டுகளை சரிபார்ப்பதில்லை. பயணிகளும் இதேபோல மற்றவர்களின் தூக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். இரவில் சத்தமாகப் பேசுவது, மொபைலை ஹெட் செட் போடாமல் பயன்படுத்துவது, மியூசிக் வாசிப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது.
மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்: ரயில் அல்லது ரயில் நிலையங்களில் புகைபிடிப்பது அல்லது மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. TTE இதுபோன்ற நபர்களைக் கண்டுபிடிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பயணிகளின் பயணத்தின் போது புகைபிடிப்பதையோ அல்லது மது அருந்துவதையோ தவிர்க்குமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
டிக்கெட் இல்லாமல் பயணிப்பது: டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இரவுப் பயணத்தின் போது பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து நீங்கள் பிடிபட்டால், TTE உங்களுக்கு அபராதம் விதிக்கலாம் மற்றும் உங்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
அவசரச் சங்கிலி: இந்திய ரயில்வே சட்டம் 141-வது பிரிவின்படி, சரியான காரணமின்றி அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினால் ஒரு வருட சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications