தமிழ்நாட்டில் முதலீடு செய்த Pou Chen, வியட்நாம்-ல் செய்யும் வேலையை பாத்தீங்களா.. அட பாவமே..!!

நைக் மற்றும் அடிடாஸ் போன்ற முன்னணி ஷூ பிராண்டுகளின் உற்பத்தி கூட்டணி நிறுவனமாக இருக்கும் தைவான் நாட்டின் மிகப்பெரிய ஷூ உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றாக இருக்கும் Pou Chen புதிய ஷூ ஆர்டர்களில் ஏற்பட்ட சரிவைக் காரணம் காட்டி, வியட்நாம் நாட்டில் அடுத்த மாத இறுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

Pou Chen நிறுவனத்தின் துணை நிறுவனம் கடந்த மாதம் தமிழ்நாட்டில் மாபெரும் உற்பத்தி தளத்தை அமைக்க சுமார் 2,302 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்து தமிழ்நாட்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய தொழிற்சாலை உளுந்தூர்பேட்டை சிப்காட் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்த Pou Chen, வியட்நாம்-ல் செய்யும் வேலையை பாத்தீங்களா.. அட பாவமே..!!

தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ள வேளையில் Pou Chen நிறுவனம் வியட்நாம் நாட்டில் பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு வியட்நாம் நாட்டின் பொருளாதாரம், வர்த்தக சூழ்நிலையும் முக்கிய காரணம்.

உலகளவில் அதிகளவில் ஆடை, காலணி மற்றும் மரச்சாமான்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வியட்நாம் முன்னிலையில் உள்ளது. ஆனால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பணவீக்கம் அதிகரித்து Living cost பெரிய அளவில் அதிகரித்து வர்த்தக சந்தை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் திறன் குறைந்து வியட்நாம் நாட்டின் உற்பத்தி, வர்த்தகம் என அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதன் வாயிலாக தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்டு உலகில் பல நாடுகளில் உற்பத்தி தளத்தை வைத்திருக்கும் Pou Chen குழுமத்தின் வியட்நாம் நாட்டின் PouYuen Vietnam அடுத்த மாத இறுதியில் நிரந்தர ஒப்பந்தங்களுடன் இணைத்திருக்கும் 6,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக வியட்நாம் அரசு அதிகாரிகள் VNExpressயிடம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்த Pou Chen, வியட்நாம்-ல் செய்யும் வேலையை பாத்தீங்களா.. அட பாவமே..!!

1996 ஆம் ஆண்டில் வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரில் PouYuen Vietnam தனது ஆப்ரேஷன்ஸ்-ஐ தொடங்கியதிலிருந்து இதுதான் மிகப்பெரிய பணிநீக்கமாகும். 50,000 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கி வரும் PouYuen Vietnam, ஹோ சி மின் நகரில் அதிக தொழிலாளர்களை கொண்டு இயங்கும் நிறுவனமாகும்.

PouYuen Vietnam ஹோ சி மின் தொழிற்சாலையில் பிப்ரவரி மாதம் கிட்டத்தட்ட 3,000 நிரந்தர ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. 3,000 தற்காலிக ஊழியர்களின் ஒப்பந்தங்கள் புதுப்பிக்காமல் வெளியேற்றியது. ஏற்கனவே 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த PouYuen மீண்டும் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+