புதுசா தொழில் தொடங்க திட்டமா ? – நிகில் காமத் கொடுக்கும் சூப்பர் ஐடியா..

இந்தியாவில் தற்போது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு குறிப்பாக நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக அதற்கு முன்பே அது வராமல் தடுப்பதற்கு வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் மற்றும் விழிப்புணர்வு மிகப்பெரிய அளவில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளது என ஸெரோதா நிறுவனத்தின் துணை நிறுவனர் நிகில் காமத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பலரும் வேலை உள்ளிட்டவற்றால் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். இவர்கள் இது தங்களுடைய ஆரோக்கியத்தை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக இளம் வயதிலேயே தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் ,உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதனை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிகில் காமத் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் சுயதொழிலை தொடங்குங்கள் வரும் காலத்தில் அது மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகும் எனக் கூறியுள்ளார்.

புதுசா தொழில் தொடங்க திட்டமா ? – நிகில் காமத் கொடுக்கும் சூப்பர் ஐடியா..

இந்தியாவில் தற்போது வருமுன் காப்பதே சிறந்தது என்ற மனநிலை அதிகரித்திருக்கிறது எனக்கூறி அது தொடர்பான புள்ளி விவரங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். இதன்படி 2025 ஆம் ஆண்டில் Preventive health care சந்தை 197 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாக உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஃபிட்னஸ் மற்றும் வெல்னஸ் சம்பந்தப்பட்ட துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றும் கூறுகிறார்.

உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து இருந்தாலும் இந்தியாவை பொறுத்தவரை அது தொடர்பான ஒரு ஒழுங்கு அமைக்கப்பட்ட பழக்கவழக்கங்கள் நம்மிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தற்போது 96,278 உடற்பயிற்சி நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் சந்தா எடுத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வார்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு என கூறியுள்ளார். அமெரிக்காவில் 21.2% மக்கள் உடற்பயிற்சி மையங்களில் மெம்பர்ஷிப் வைத்திருக்கிறார்கள் இந்தியாவில் அது வெறும் 0. 2 சதவீதமாகத் தான் இருக்கிறது.

அப்படியே ஒரு ஆர்வத்தில் இந்த உடற்பயிற்சி நிலையத்தில் மெம்பர்ஷிப் எடுத்தாலும் பலரும் அதனை ஒழுக்கத்துடன் தொடர்வது கிடையாது எனக் கூறியிருக்கிறார் . இந்தியாவில் இருக்கும் உடற்பயிற்சி நிலையங்கள் சரியாக மேலாண்மை செய்யப்படுவது கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியர்கள் மத்தியில் இதற்காக செலவிட வேண்டுமா என்ற மனநிலையும் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

44 சதவீத இந்தியர்கள் வீட்டிலிருந்தே உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தொகையில் 29 சதவீதம் பேர் உடற்பயிற்சியே செய்வது கிடையாது, 56 சதவீதம் பேர் அவ்வப்போது உடற்பயிற்சி செய்கின்றனர். பெரும்பாலும் நடைபயிற்சிக்கு செல்லும் பழக்கம் இருக்கிறது. ஒரு சிலர் சைக்கிள் ஓட்டுவது, யோகாசனம் செய்வது உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் புத்தாண்டு தீர்மானத்தின் ஒரு பகுதியாக 12.5% பேர் உடற்பயிற்சி நிலையங்களில் மெம்பர்ஷிப் எடுத்துக் கொள்கின்றனர், ஆனால் அவர்கள் 80 சதவீதம் பேர் 5 மாதங்கள் கூட தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதற்கு வருவதில்லை. இந்தியாவில் 10,000 பேரில் 46 பேர் மட்டும் தான் ஜிம்முக்கு செல்கின்றனர், சர்வதேச அளவில் இது 844 ஆக இருக்கிறது என பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்திய குடும்பங்களில் 30 சதவீத செல்வமானது பரவாத நோய்களான புற்றுநோய், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு உள்ளிட்டவற்றுக்கே செலவிடப்படுகிறது. எனவே நோய் வராமல் காக்க உதவும் உடற்பயிற்சி, யோகா, சத்தான உணவு ஆகிய பிரிவுகளில் தொழில்களை தொடங்கினால் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என கூறியுள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+