முகேஷ் அம்பானி குடும்பம் ஆடம்பரத்தில் திளைத்திருக்கும் வேளையில், இக்குடும்பம் கலந்துக்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியலும் அனைவருடைய கவனமும் இவர்கள் மீது திரும்புகிறது. ஆனால் சில அம்பானி குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளனர் என்றால் மிகையில்லை.
அம்பானி குடும்பத்தில் பிரபலமாகி, அதிகம் மீடியா வெளிச்சத்தில் இல்லாமல் இருக்கும் ஒருவர் முகேஷ் அம்பானியின் சகோதரி நினா எனப்படும் நினா கோத்தாரி. அனில் அம்பானி, முகேஷ் அம்பானியை ஒட்டுமொத்த வர்த்தக உலகத்திலும் பிரபலமாக இருக்கும் வேளையில், அவருடைய சகோதரி நினா கோத்தாரி-யை பலருக்கும் தெரியும். இன்னும் சொல்லப்போனால் முகேஷ் அம்பானி-க்கு 2 சகோதரிகள் இருப்பதே பலருக்கும் தெரியாது.

அம்பானி குடும்பத்தில் பிறந்துவிட்டு பிஸ்னஸ் மீது எப்படி ஆர்வம் இல்லாமல் இருக்கும், நினா கோத்தாரி தனது முதல் வர்த்தக பாதையை 2003ல் துவங்கினார். JavaGreen எனப்படும் காஃபி மற்றும் உணவு விற்பனை கடைகளை திறந்தார், இந்த வர்த்தகம் இந்தியாவில் பிற காஃபி ஷாப் போல் பிரபலம் ஆகாத காரணத்தால் மூடப்பட்டது.
இதன் பின்பு சில வருடங்கள் நினா கோத்தாரி தனது குடும்பத்தை கவனித்து வந்தார், அப்போது தான் அவருடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் சம்பவம் நடந்தது. நினா கோத்தாரி-யின் கணவரும், தொழிலதிபருமான பத்ராஷ்யம் கோத்தாரி, 2015ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறைந்தார்.
1986 ஆம் ஆண்டு நினா கோத்தாரி, பத்ராஷ்யம் கோத்தாரி-ஐ மணந்தார், அவருடைய மறைவுக்கு பின்பு, அர்ஜுன் மற்றும் நயன்தாரா ஆகிய இரு குழந்தைகளை வளர்க்கும் முக்கிய பொறுப்பு நினா கோத்தாரி-க்கு வந்தது. இதை தாண்டி தனது கணவர் உருவாக்கிய கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பும் அவருக்கு இருந்தது, இந்த கடுமையான சவால்களை கடந்து கோத்தாரி சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
கணவர் இறந்த அதே வருடத்தில் அதாவது ஏப்ரல் 8, 2015ல் கோத்தாரி சுகர்ஸ் சேர்பர்சன் பதவியை ஏற்றார், இதுதான் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. இவருடைய முயற்சியின் கீழ் கோத்தாரி சுகர்ஸ் வேகமாக வளர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் முக்கிய நிறுவனமாகவும் மாறியது, Kothari Sugars திருச்சி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் ஆலைகளை வைத்து இயங்கியது.
Kothari Sugars நினா கோத்தாரி நிர்வாகத்தின் கீழ் HC Kothari Group ஆக உருவெடுத்து Kothari Petrochemicals மற்றும் Kothari Safe Deposits ஆகிய இரு நிறுவனங்களை உருவாக்கியது மட்டும் அல்லாமல் தனது வர்த்தகத்தை உலக நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்து வருகிறது.
தற்போது நினா கோத்தாரியின் மகன் அர்ஜூன் Kothari Sugars-ன் நிர்வாக இயக்குனராக உள்ளார். 2019ல் மாரிகோ குடும்பத்தின் பேத்தியான அனந்தித்தா மாரிவாலா-வை திருமணம் செய்துக்கொண்டார். மகள் நயன்தாரா KK பிர்லா குடும்பத்தின் பேரனான ஷாமிட் பார்தியா-வை திருமணம் செய்துக்கொண்டார்.
தற்போது நினா கோத்தாரி கட்டுப்பாட்டில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இரு நிறுவனங்கள் உள்ளது. இதன் மூலம் சுமார் 52.4 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் வர்த்தகத்திலும், குடும்பத்திலும் வெற்றிக்கண்டுள்ளார். திருபாய் அம்பானியின் ரத்தம்-னா சும்மாவா..?

முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரராக இருப்பது மட்டும் அல்லாமல் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை வேகமாக விரிவாக்கம் செய்வது மூலம் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது அவருடைய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
திருபாய் அம்பானி - கோகிலாபென் அம்பானிக்கு மொத்தம் 4 பிள்ளைகள், 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். திருபாய் அம்பானி எனப்படும் தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி மறைவுக்கு பின்பு அனில் அம்பானி, முகேஷ் அம்பானிக்கு மத்தியில் நடந்த பெரும் பிரச்சனைக்கு மத்தியில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் இரண்டாக உடைந்தது.
இதன் மூலம் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் இரு மகள்களுக்கும் எவ்விதமான பொறுப்பும் இல்லாமல் போனதால் இன்றைய வர்த்தக உலகிற்கு திருபாய் அம்பானி - கோகிலாபென் அம்பானி-யின் இரு மகள்களும் பிரபலமாகவில்லை. திருபாய் அம்பானி மறைவுக்கு முன்பே இரு மகள்களுக்கும் திருமணமான நிலையில் ரிலையன்ஸ் நிர்வாகத்தில் இவர்களுக்கு எவ்விதமான பொருப்பும் அளிக்கப்படவில்லை.
READ MORE ON AMBANI FAMILY
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications