கடந்த வாரத்தில் சரிவில் காணப்பட்ட இந்திய சந்தையில், டாப் 10 நிறுவனங்களில், 9 நிறுவனங்களின் சந்தை மூலதனம் 1,47,360.93 கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் டாப் லூசராகவும் உள்ளது.
இதே காலகட்டதில் சென்செக்ஸ் 1050.68 புள்ளிகள் அல்லது 1.73% சரிவினைக் கண்டுள்ளது. இந்த வாரத்தில் குருநானக் ஜெயந்தி காரணமாக சந்தை ஒரு நாள் விடுமுறையாகும். ஆக நான்கு நாட்களில் இந்த அளவு சரிவினைக் கண்டுள்ளது.
டாப் 10 நிறுவனங்கள் எது?
டாப் 10 சந்தை மூலதனத்தினை கொண்ட நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மற்றும் கோடக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.
டாப் லூசராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் டாப் லூசராக உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 75,691.53 கோடி ரூபாய் குறைந்து, 15,68.550.17 கோடி ரூபாயாக குறைந்துள்ளது..
இதற்கிடையில் கடந்த அமர்வில் இதன் பங்கு விலையானது .038% அதிகரித்து, 2,473.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்
இதே ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், 18,069.87 கோடி ரூபாய் குறைந்து, 12,85,660.79 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில், 1.31% குறைந்து, 3,475.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மதிப்பு
தனியார் நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனமானது, 12,321.11 கோடி ரூபாய் குறைந்து, 5,29,236.66 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த ஹெச்.டி.எஃப்.சி-யின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.78% குறைந்து, 2,925.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
கோடக் மகேந்திரா வங்கி
கோடக் மகேந்திரா வங்கி சந்தை மூலதனம் 9,816.28 கோடி ரூபாய் குறைந்து, 4,01,367.04 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த அமர்வில் 1.40% குறைந்து, 2,024.45 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனமானது, 9,409.46 கோடி ரூபாய் குறைந்து, 5,29,606.94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையும் கடந்த அமர்வில், சற்று அதிகரித்து, 762.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பு
முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனமானது, 7,904.08 கோடி ரூபாய் குறைந்து, 8,52,532.36 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.56% அதிகரித்து, 1,539.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
எஸ்பிஐ -யின் சந்தை மதிப்பு
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யின் சந்தை மூலதனம், 6,514.96 கோடி ரூபாய் குறைந்து, 4,49,755.80 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த அமர்வில் எஸ்பிஐ-யின் பங்கு விலையானது, சற்று அதிகரித்து, 503.80 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் சந்தை மதிப்பு
தனியார் வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 5,166.77 கோடி ரூபாய் குறைந்து, 4,52,188.74 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.61% குறைந்து, 7,484.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2,196.87 கோடி ரூபாய் குறைந்து, 5,63,349.75 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த அமர்வில் 0.34% அதிகரித்து, 2,399.40 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு
இதில் ஒற்றை நிறுவனமான ஐடி துறையில் மற்றொரு முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் மட்டும், வெறும் 294.39 கோடி ரூபாய் அதிகரித்து, 7,48,875.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.45% குறைந்து, 1,779.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications