ஒரே வாரத்தில் 2.62 லட்சம் கோடி இழப்பு கண்ட 9 நிறுவனங்கள்.. பலத்த அடி வாங்கிய பஜாஜ் பைனான்ஸ்..!

கடந்த வாரத்தில் சரிவில் காணப்பட்ட இந்திய சந்தையில் டாப் 10 நிறுவனங்களில், 9 நிறுவனங்களின் சந்தை மூலதனம் 2,62,146.32 கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்ட பங்கு சந்தைக்கு மத்தியில் பல நிறுவனங்களும் பெருத்த அடி வாங்கின. இது முதலீட்டாளர்களுக்கும் கடந்த வாரத்தில் பெரும் இழப்பாகத் தான் இருந்தது.

பஜாஜ் பைனான்ஸ் சந்தை மதிப்பு

பஜாஜ் பைனான்ஸ் சந்தை மதிப்பு

டாப் 10 நிறுவனங்களில் டாப் லூசர் தனியார் வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 41,518.24 கோடி ரூபாய் குறைந்து, 4,10,670.50 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 4.47% குறைந்து, 6,807.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 

இரண்டாவது லூசராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இரண்டாவது லூசராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இரண்டாவது இடத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 38,440.66 கோடி ரூபாய் குறைந்து, 15,30,109.51 கோடி ரூபாயாக குறைந்துள்ளது..

இதற்கிடையில் கடந்த அமர்வில் இதன் பங்கு விலையானது 3.22% குறைந்து, 2,412.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இன்ஃபோசிஸ்-ன் சந்தை மதிப்பு

இன்ஃபோசிஸ்-ன் சந்தை மதிப்பு

கடந்த வாரத்தில் ஒற்றை நிறுவனமாக டாப் கெயினராக இருந்த ஐடி துறையில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் மட்டும், வெறும் 37,950.03 கோடி ரூபாய் குறைந்து, 7,10,925.34 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.79% குறைந்து, 1,691.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 

ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மதிப்பு

ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மதிப்பு


தனியார் நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனமானது, 33,067.68 கோடி ரூபாய் குறைந்து, 4,96,168.98 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த ஹெச்.டி.எஃப்.சி-யின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 4.40% குறைந்து, 2,741.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 

எஸ்பிஐ -யின் சந்தை மதிப்பு

எஸ்பிஐ -யின் சந்தை மதிப்பு

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யின் சந்தை மூலதனம், 29,852.83 கோடி ரூபாய் குறைந்து, 4,19,902.27 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்த அமர்வில் எஸ்பிஐ-யின் பங்கு விலையானது, 4.09% வீழ்ச்சி கண்டு, 470.50 ரூபாயாக குறைந்து முடிவடைந்துள்ளது.

 

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனமானது, 28,567.03 கோடி ரூபாய் குறைந்து, 5,01,039.91 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையும் கடந்த அமர்வில், 3.84% சரிந்து, 722.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பு

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பு

முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனமானது, 26,873.77 கோடி ரூபாய் குறைந்து, 8,25,658.59 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.36% குறைந்து, 1,489.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 14,778.93 கோடி ரூபாய் குறைந்து, 5,48,570.82 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த அமர்வில் 0.59% குறைந்து, 2,335.10 ரூபாயாக குறைந்து முடிவடைந்துள்ளது.

 

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

இதே ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், 11,097.15 கோடி ரூபாய் குறைந்து, 12,74,563.64 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 3,446.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 

பார்தி ஏர்டெல் மதிப்பு

பார்தி ஏர்டெல் மதிப்பு

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 12,769.55 கோடி ரூபாய் குறைந்து, 4,05,009.55 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த அமர்வில் 1.40% குறைந்து, 2,024.45 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.

 

டாப் 10 நிறுவனங்கள் எது?

டாப் 10 நிறுவனங்கள் எது?

டாப் 10 சந்தை மூலதனத்தினை கொண்ட நிறுவனங்களில் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்திலும், அதனை தொடர்ந்து டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+