சென்னை: மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள், அதனை புரிந்து முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என்று கேள்விப்பட்டிருப்போம். அது உண்மையில் தற்போது நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் திறம்பட செயல்பட்ட ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம்.
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த ஃபண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, நிலையான வருமானத்தை கொடுத்துள்ளது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் முதலீடு செய்தவர்கள் சுமார் 1653 சதவீத முழுமையான வருவாய் பெற்றிருப்பார்கள் மற்றும் வருடாந்திர வருமானமாக 23.30 சதவீதம் சம்பாதித்து இருப்பார்கள்.

2010ஆம் ஆண்டில் ஒருவர் ரூ. 1 லட்ச ரூபாயை நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டில் முதலீடு செய்திருந்தார் என்றால், தற்போது அவருக்கு ரூ. 17.5 லட்சம் கிடைத்திருக்கும். அதாவது அதிலிருந்து 14வது ஆண்டில் இந்தத் தொகையை பெற்றிருப்பார். அதுவே 10 வருடத்தில் வருடாந்திர வருமானமாக 28 சதவீதம் கிடைத்திருக்கும். 5 ஆண்டுகளில் வருடாந்திர வருமானமாக 34 சதவீதம் கிடைத்திருக்கும். அதேபோல 3 ஆண்டுகளில் பார்த்தோமேயானால் 36 சதவீதமும், 1 ஆண்டில் 60 சதவீதமும் ரிட்டன்ஸ் கிடைத்திருக்கும். இதிலிருந்து இந்த ஃபண்ட் ஆரம்பித்ததில் இருந்து திறம்பட செயல்பட்டு வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோல நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டில் SIP முதலீடாக செய்திருந்தாலும் நல்ல வருமானத்தை பெற்றிருக்கலாம். கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீடுகள் செய்தவர்கள் வருடாந்திர வருமானமாக 27 .14 சதவீத வருவாயை பெற்றிருப்பார்கள். இதன் மொத்த வருவாய் கணக்கிட்டால் 322.34 சதவீதம் ஆகும். அதன்படி 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் மாதம் ரூ. 10,000 ஆயிரம் SIP முதலீடு செய்திருந்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய வருமானம் ரூ. 50 லட்சம் ஆக இருந்திருக்கும்.
அதேபோல 5 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 1 வருடம் போன்ற குறுகிய காலக்கட்டங்களிலும், இந்த ஃபண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டு வருவாயாக 40.55 சதவீதமும், முழுமையான அடிப்படையில் 167 சதவீதமும் வருவாயை அளித்துள்ளது. அதேபோல 3 ஆண்டில் 38 சதவீதமும், 1 வருட வருமானமாக 54 சதவீதமும் வழங்கியுள்ளது.
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் சுமார் 954 சதவீதத்தை உள்நாட்டு பங்குகளிலும், 6.53 சதவீதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், 11.22 சதவீதத்தை மிட்கேப் பங்குகளிலும், 54.39% ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. குறுகிய காலகட்டத்தில் முதலீடு செய்து நல்ல வருமானம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் நல்ல தேர்வாக இருக்கும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு ஸ்மால் கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய நாங்கள் உங்களுக்கு பரிந்துரை செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஸ்மால் கேப் ஃபண்டு ரூ. 10,000 SIP முதலீட்டை ரூ. 50 லட்சமாக மாற்றியது என்பதைத்தான் விவரிக்கிறது. மேலே கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஒருவர் முதலீட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது. நீங்கள் முதலீட்டு முடிவுகள் எடுப்பதற்கு முன்பு, உங்களுடைய நிதி ஆலோசகரை கலந்து ஒன்றுக்கு இருமுறை யோசித்து உங்களின் சுய விருப்பத்தில் முதலீடு செய்யவும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications