பஞ்சாப் நேஷனல் பேங்கை உலகம் அறியச் செய்த புகழ், நம் மத்திய அரசுக்கு இருக்கிறதோ இல்லையோ... நம் நிரவ் மோடிக்கு நிறைய உண்டு.
காரணம் அவர் செய்த நுட்பமான 13,000 கோடி ரூபாய் ஊழல். ஊழலை சிறப்பாகச் செய்து விட்டு பிடிபட்டு விடுவோமோ என்கிற பயத்தில் தெளிவாக லண்டன் நகரத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.
இன்று நிரவ் மோடியை, இந்தியாவுக்குக் கொண்டு வர, இங்கிலாந்தில் சட்ட ரீதியாக போராடிக் கொண்டு இருக்கிறது மத்திய அரசு.
மிரட்டல்
நிரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாமா, வேண்டாமா என இங்கிலாந்து நீதி மன்றத்தில் எம்மா ஆர்புத்நாட் (Emma Arbuthnot) என்கிற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த விசாரணையில் "என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் நான் தற்கொலை செய்து கொள்வேன்" என நம் பஞ்சாப் நேஷனல் பேங்க் புகழ் நிரவ் மோடி நேரடியாக இங்கிலாந்து நீதிமன்றத்தையே மிரட்டி இருக்கிறார்.
இந்திய தரப்பு
மத்திய அரசின் தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதாடிய க்ரவுன் ப்ராசிக்யூஷன் சர்வீசஸ் நிறுவனம் "நிரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தால், தற்கொலை செய்து கொள்வேன் என நிரவ் மோடி மிரட்டுவதே, அவர் ஓட இருப்பதாகவே தெரிகிறது" என பாயிண்ட் பிடித்து பேசி இருக்கிறார்.
நிரவ் மோடி தரப்பு
நிரவ் மோடி தரப்பில் வாதாடிய ஹிகோ கெய்த் "என் கட்சிக்காரர், சிறையில், மற்ற இரண்டு சிறைவாசிகளால் பயமுறுத்தப்பட்டு இருக்கிறார். எனவே தன் கட்சிக்காரருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும்" எனக் கேட்டு இருக்கிறார். அதோடு நிரவ் மோடி கடுமையான மன அழுத்தம் மற்றும் கவலையில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். நிரவ் மோடியின் உடல் நிலை குறித்த அறிக்கைகள் பத்திரிகைகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்திய தரப்பு
நிரவ் மோடி உடல் நிலை குறித்த விவரங்கள் பத்திரிகைகளில் வெளியானது சரியல்ல. அதோடு நிரவ் மோடியின் உடல் குறித்த விவரங்களை இந்தியாவின் மத்திய அரசு வெளியிடவே இல்லை எனவும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். நீதிபதியும், "நிரவ் மோடியின் உடல் நிலை குறித்த விவரங்கள் வெளி ஆகி இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. ஒருவேளை இந்த வேலையை இந்திய தரப்பினர் செய்திருந்தால், அது இந்திய தரப்பின் மீதான நம்பிக்கையை குறைப்பதாக அமையும்" எனவும் சொல்லி இருக்கிறார்.
ஜாமீன் மறுப்பு
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டார். அதோடு நிரவ் மோடிக்கு ஜாமின் கொடுத்தால், அவர் சாட்சியங்களில் தலையிடாமல் இருப்பார் என்கிற நம்பிக்கை இல்லை. அதோடு இவர் மீண்டும் குறித்த நேரத்தில் நீதிமன்றத்தில் சரண் அடைவார் என்கிற நம்பிக்கையும் இல்லை எனச் சொல்லி இருக்கிறார்.
அடுத்த விசாரணை
நிரவ் மோடி தன் அடுத்த விசாரணைக்கு தயார் ஆக, ஒரு லேப்டாப்பை கொடுக்கச் சொல்லி இருக்கிறார் நீதிபதி. அதோடு சிறையில் நடந்த மிரட்டல் குறித்தும் சம்மந்தப்பட்ட துறைக்கு எழுதுவதாகச் சொல்லி இருக்கிறார் நீதிபதி எம்மா அர்புத்நாட். நிரவ் மோடியின் ஜாமின் மனுவை வரும் டிசம்பர் 04, 2019 அன்று மீண்டும் விசாரிக்க இருக்கிறார்களாம். நிரவ் மோடியை இந்தியா அனுப்புவதற்கான வழக்கை வரும் 2020 மே 11 முதல் 15 வரை விசாரிக்க இருக்கிறார்களாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications