90கிட்ஸ் அனைவருக்கும் நினைவில் இருக்கும் விளம்பரங்களில் வாஷிங் பவுடர் நிர்மா, இந்த நிறுவனம் வெறும் சலவை பவுடர் வர்த்தகத்தில் இருந்து பல துறையில் இறங்கி தற்போது 12000 கோடி நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் வர்த்தகத்தை பல்வகைப்படுத்த வேண்டும் என்பதற்காக வாஷிங் பவுடர் நிர்மா-வை நிர்வாகம் செய்ய நிர்மா குரூப் ஹோட்டல் துறையில் இறங்க உள்ளது.
அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பல்வேறு வர்த்தகத்தை செய்யும் நிர்மா குழுமம், தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு ஹோட்டல் துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது. இந்த மாபெரும் நிறுவனம் தற்போது சோப்பு, சோடா ஆஷ், காஸ்டிக் சோடா, சிமெண்ட், சுகாதார சேவை போன்ற துறைகளில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் புதிதாக உயர்தர ஐந்து நட்சத்திர ஹோட்டலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. இந்த ஹோட்டல் ஆடம்பர சந்தையை இலக்காகக் கொண்டு துவங்கப்பட உள்ளது.
நிர்மா குழுமம் திட்டமிட்டுள்ள இந்த ஆடம்பர 5 ஸ்டார் ஹோட்டலில் 555 அறைகள் இருக்கும். இது அகமதாபாத்தின் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் அமைக்கப்படுவதாக தெரிகிறது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகு, கட்டுமானப் பணிகள் தொடங்கும். இத்தகைய பெரிய அளவிலான ஹோட்டல், உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
இந்த ஹோட்டலை நேரடியாக இயக்குவதற்கு நிர்மா குழுமம் விரும்பவில்லை, இதனால் பல்வேறு சர்வதேச ஹோட்டல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் முக்கியமாக இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (ஐஎச்சிஎல்), ஹையாட் ஹோட்டல்ஸ், மாரியட் இன்டர்நேஷனல் போன்ற பெரு நிறுவனங்கள் அடங்கும்.
இத்தகைய பெரிய பிராண்டுகள் இந்த ஹோட்டலை இயக்குவதன் மூலம் அதன் தரத்தை எளிதாக உயர்த்த முடியும் என்பது நிர்மா குழுமத்தின் நம்பிக்கை. இதேபோல் இத்துறை வர்த்தகத்திற்கு புதியது என்பதால் பெரிய பிராண்டின் கூட்டணி கட்டாயம் பலன் அளிக்கும். உலகளாவிய அனுபவத்தை இந்த ஹோட்டலுக்கு கொண்டு வர முடியும்.
இந்த ஹோட்டல் 2030 காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு முன்பு இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications