பிரதமர் நரேந்திர மோடியின் 3வது முறை ஆட்சியில் இரண்டாவது முறையாக நிதியமைச்சராகப் பதவியேற்றுள்ளார் நிர்மலா சீதாராமன், இவருடைய நியமனம் குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் தனது பணிகளில் அதிரடி காட்ட துவங்கினார்.
நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பணிக்குத் திரும்பிய உடன் எப்போதும் ஒரேயோரு தவணையாகச் செலுத்தப்படும் மாநிலங்களுக்கான பங்கீட்டை தற்போது 2 தவணையாக அளிப்பதாக அறிவித்தார். 28 மாநிலங்களுக்கு, அவர்களின் வளர்ச்சி மற்றும் மூலதனச் செலவினங்களை உயர்த்துவதற்காக, இரண்டு வரிப் பகிர்வு தவணைகளில் மொத்தம் 1,39,751 கோடி ரூபாயை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்.

திங்கள்கிழமை மாலை புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் முதல் கூட்டத்திற்குப் பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் செயலர் டி.வி.சோமநாதன் மற்றும் பொருளாதார விவகாரங்கள் செயலர் அஜய் சேத் ஆகியோருடன் மாநிலங்களின் பொருளாதார மற்றும் நிதி நிலைமையை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்தடுத்து பல பணிகளைச் செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார். அப்படி நிர்மலா சீதாராமன் அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.
கர்நாடகாவின் ராஜ்யசபா உறுப்பினரான நிர்மலா சீதாராமன் 2025 ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை அளவை 5.1 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக இந்த வருடம் பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத நிர்மலா சீதாராமன் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வைத்து நரேந்திர மோடி 3.0 அரசின் முக்கிய இலக்காவான நிதியமைச்சக இலாக்காவைத் தட்டி சென்றார். நிர்மலா சீதாராமன் இதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருப்பதோடு கார்ப்பரேட் விவகார அமைச்சராகவும் பொறுப்பு வகிக்க உள்ளார் என்று மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் அடுத்தடுத்து செய்யப்போகும் முக்கிய பணிகள் என்ன..?
Budget Ready: 2025 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் 12.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் இதுவரை வழங்கப்பட்ட மொத்த தொகை ₹2,79,500 கோடியாக உள்ளது.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் நரேந்திர மோடி 3.0 NDA கூட்டணி அரசில் மீண்டும் நார்த் பிளாக்கிற்குத் திரும்புகிறார். தற்போது இவருடைய முக்கியமான பணி 2025 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அறிக்கையைத் தயார் செய்வதும், அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதும் தான்.
அடுத்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டு இருக்கும் பட்ஜெட், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நரேந்திர மோடி அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை, திட்டம், இலக்கு ஆகியவற்றைப் படம் போட்டுக் காட்டும் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் வாக்குறுதியளித்த அடுத்த தலைமுறை பொருளாதார மற்றும் வர்த்தக சீர்திருத்தங்கள் குறித்து அறிவிப்புகள் இந்த முழு பட்ஜெட் அறிக்கையில் கூர்ந்து கவனிக்கப்படும்.
2வது முறையாக நிதியமைச்சர் என்ற முக்கிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு உள்ள சீதாராமன் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள் என்றால் அது தற்போது இருக்கும் உயர் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைப்பது தான்.
இதேபோல் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜிஎஸ்டி முறையை மறுசீரமைப்பு செய்யும் பணியை இந்த ஆட்சியில் நிர்மலா சீதாராமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் நிதியாண்டில் இந்தியா 8.2% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாகத் தொடர்ந்து தனது பதவியை நிலை நிறுத்திக்கொண்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) திட்டம் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications