இந்திய ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசனை செய்த பின்பு வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் இந்திய மக்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கு 20 சதவீத ஆதாரத்தில் இருந்து வரி வசூல் (TCS) செய்யும் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்த அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து பல பிரிவு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக வெளிநாட்டுக்கு டூர் செல்ல திட்டமிட்டு இருக்கும் அனைவருக்கும் இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் அந்நிய செலாவணி மேலாண்மை விதிகள் 2023 கீழ் ஜூலை 1 முதல் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ் சர்வதேச கிரெடிட் கார்டு பேமெண்ட்-கள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இந்தியாவிற்கு வெளியே செய்யப்படும் கிரெடிட் கார்டு பேமெண்ட்-க்கு 20 சதவீதம் TCS விதிப்பு செயல்படுத்துகிறது.
இதற்கு முன்பு 20 சதவீதம் TCS விதிப்பு என்பது டெபிட் கார்டு, ஃபாரெக்ஸ் கார்டு, abd வங்கி பரிமாற்றங்கள் ஆகியவை மட்டுமே அடங்கும். வெளிநாடுகளில் பயணத்தின் போது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவது முன்பு LRS இன் கீழ் சேர்க்கப்படவில்லை, நேற்றைய அறிவிப்பு மூலம் சேர்க்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு வெளிநாடுகளில் செய்யப்படும் அதிக மதிப்புடைய பண பரிவர்த்தனைகளை டிராக் செய்து அதற்கு முறையான வரி விதித்து கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக ஜூலை 1 முதல் வெளிநாட்டு கிரெடிட் கார்டு பேமெண்ட்-க்கு 20 சதவீதம் TCS விதிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது.

இந்த டிசிஎஸ் வரி மருத்துவ செலவுகள், கல்வி செலவுகளுக்கான பரிமாற்றத்திற்கு தற்போது இருக்கும் 5 சதவீதம் ஜூலை 1 ஆம் தேதிக்கு பின்பும் தொடரும். ஆர்பிஐ நிர்வாகம் செய்யும் LRS எனப்படும் Liberalised Remittance Scheme கீழ் வருடத்திற்கு 2 கோடி ரூபாய் வரையில் அதாவது 250000 டாலர் வரையில் எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் பணம் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியம்.
இந்த நிலையில் இந்தியர்கள் வெளிநாட்டில் அல்லது வெளிநாட்டு சுற்றுலா செல்லும் போது செய்யப்படும் கிரெடிட் கார்டு வாயிலான பண பரிமாற்றங்கள் Liberalised Remittance Scheme கீழ் வராது. ஆனால் ஜூலை 1 முதல் இதுவும் LRS கீழ் வருவதால் அனைத்து வெளிநாட்டு நிதி பரிமாற்றமும் 250000 டாலருக்குள் அடக்கும்.
ஆனால் இது நிறுவனங்கள் மத்தியிலும், வருமான வரி துறை வல்லுனர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக அஜய் ரோட்டி என்பவர் 20 சதவீத டிசிஎஸ் என்பது நாட்டின் Ease Of Doing Business அளவீட்டை பாதிக்கும். இதேபோல் 20 சதவீத டிசிஎஸ் என்பது மிகவும் அதிகம் என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications