மூலதன செலவினங்களுக்காக ரூ.11.21 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்த நிர்மலா சீதாராமன்..

டெல்லி: 2025 -26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலதன செலவினங்களுக்காக 11.21 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து உள்கட்டமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் உள்கட்டமைப்பு திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலதன செலவினங்களுக்காக 11.11 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருந்தார். இது நாட்டின் மொத்த ஜிடிபியில் 3.4 சதவீதமாக இருந்தது. இந்த முறை அரசு அதனை சற்றே உயர்த்தி 11.21 லட்சம் கோடி என அறிவித்துள்ளது.

மூலதன செலவினங்களுக்காக ரூ.11.21 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்த நிர்மலா சீதாராமன்..

அதே போல பல்வேறு மாநிலங்களிலும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்காக 1.5 லட்சம் கோடி ரூபாயை வட்டி இல்லாத கடனாக வழங்குவோம் என்ற அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த 1.5 லட்சம் கோடி ரூபாய் கடன் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு வட்டி இல்லாத கடனாக வழங்கப்படும் என்றார். உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தையும் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அரசு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்தி வருகிறது. நகரங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவதற்காக Urban Challenge Fund என்ற ஒரு நிதியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் வெளியிட்டார்.

இது 1 லட்சம் கோடி ரூபாய் கொண்ட நிதியமாக இருக்கும் என்றும் பல்வேறு நகரங்களையும் வளர்ச்சி மையங்களாக மாற்றுவதற்கு இது பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் (Public-Private Partnership) எனப்படும் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு கொண்ட திட்டங்கள் தொடர்பான மூன்று ஆண்டுகால கொள்கைகள் அந்த சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மூலம் வெளியிடப்படும் என்றும் இது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு திட்டமிட்ட அணுகுமுறையாக இருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Second Asset Monetization Plan for 2025-30 என்ற ஒரு புதிய திட்டத்தையும் அவர் அறிவித்தார். 2025 - 2030 ஆகிய ஐந்து ஆண்டுகளை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சொத்துக்களை பணமாக்கும் இந்த திட்டம் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டு பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து நாட்டின் வளர்ச்சியை நிலை நிறுத்த பயன்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

2025 ஆம் நிதியாண்டிற்காக அரசு 11.18 லட்சம் கோடி ரூபாயை மூலதன செலவினமாக ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் அதில் 10.18 லட்சம் கோடியை மட்டுமே செலவு செய்திருந்தது. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதன் காரணமாகவே எதிர்பார்த்த இலக்கினை எட்ட முடியவில்லை என அரசு தரப்பில் தெரிவித்து இருந்தது.

Story written - Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+