இன்னும் 3 மாதத்திற்கு எந்த ஏடிஎம் கட்டணமும் கிடையாது.. மினிமம் பேலன்ஸூம் தேவையில்லை..!

கொரோனா வைரஸ் தாக்கமானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பலவேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் ஏடிஎம் மற்றும் வங்கி சலுகை குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

எங்கு வேண்டுமானலும் பணம் எடுக்கலாம்

எங்கு வேண்டுமானலும் பணம் எடுக்கலாம்

நாட்டில் நிலவி வரும் அசாதாரன சூழ்நிலைக்கு மத்தியில் மக்கள் தங்களது வருவாயினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக மக்களுக்கு சிறிது உதவும் வகையில் சில அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதாவது அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு எந்த வங்கிகளில் வேண்டுமானலும் டெபிட் கார்டு உரிமையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ளலாம், அதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்றும் அறிவித்துள்ளார்.

மினிமம் பேலன்ஸ் தேவையில்லை

மினிமம் பேலன்ஸ் தேவையில்லை

இது மட்டும் அல்ல, அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் என்பதை வைத்திருக்க தேவையில்லை. சில வங்கிகள் இதற்கான 100 முதல் 500 ரூபாய் வரையில் அபாரதம் விதிப்பதுண்டு. இதனால் எப்போதும் கட்டாயம் பணத்தினை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அபராதம்

அபராதம்

அதிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த நிலையில் இதன் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இது போன்ற அபராதங்கள் மக்களை மேலும் பிரச்சனைக்குள்ளாகலாம். இதே போல ஏடிஎம் கார்டு கட்டணங்கள் மூன்று முறைக்கு மேல் அந்தந்த வங்கிகள் தவிர, வேறு வங்கி ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் போது அதற்காக அபராதத்தையும் கொடுக்க நேரிடுகிறார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு

முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு

இதே அதே வங்கியில் பணம் எடுக்கலாம் என்றாலும், அதற்காக பல கிலோ மீட்டர் தூரம் சென்று பணம் எடுக்கும் நிலையில் உள்ளனர், ஏனெனில் அவரவர் வங்கிகள், அவரவர் வசிக்கும் பகுதிகளில் இருப்பது கடினமே. இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கதக்க விஷயமே. அதிலும் நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+