கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.
இதற்கிடையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புலம் பெயர் தொழிலாளர்களுக்கென சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார்.

சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க 50 ஆயிரம் கோடி ரூபாயிலான திட்டங்களை அறிவித்தார். மேலும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க 25 வகையான பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் புலம் பெயர் தொழிலாளர்களை விவசாயம், அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்ற பணிகளில் அந்தந்த ஊர் மக்களை உள்ளூரிலேயே பணி வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இருந்து ஊர் திரும்பியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் திறமையை கண்டறிந்து, மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் எனவும் நிதியமைச்சர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் உள்ள கிரமாப்புற மக்களுக்கும் சொந்த ஊர் திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான மாபெரும் கிராமப்புற பொதுப்பணி திட்டமான கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான் எனப்படும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த திட்டத்தினை ஊரக வளர்ச்சி துறை, பஞ்சாயத்து ராஜ், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, சுரங்கத்துறை, குடிநீர் மற்றும் துப்புரவு, சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எல்லைப்புறச் சாலைகள், தொலைத்தொடர்பு மற்றும் வேளாண்மை போன்ற, 12 பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த உள்ளன.
இந்தத் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூன் 20, அன்று தொடங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 125 நாட்களுக்கு, மாபெரும் பணி வழஙப்பட உள்ளது. இது புலம் பெயர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக உள்ளது என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களில் பணியினை பெற முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications