மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா முன்பணம்.. பண்டிகைகால சிறப்பு சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இதற்காக மாதம் 1,000 ரூபாய் வீதம் அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பொருளாதாரத்தினை தூண்டும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்கப்பட உள்ளது.

யார் யாருக்கு?

யார் யாருக்கு?

இந்த முன்பணம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், நெருக்கடியான பொருளாதார சூழல் கருதி, இந்த தொகையானது வழங்கப்பட உள்ளது. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாதம் ரூ.1000 பிடித்தம்

மாதம் ரூ.1000 பிடித்தம்

அதோடு இந்த 10,000 ரூபாயானது ரூபே ப்ரீபெய்ட் கார்டு மூலம் வழங்கப்படும். இந்த கார்டில் உள்ள தொகையை மார்ச் 31, 2021 வரை செலவு செய்து கொள்ள முடியும். இந்த கார்டின் மூலம் ஊழியர்கள் பெறும் 10,000 ரூபாய்க்கான தொகையில், மாதம் 1000 வீதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, 10 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்படும். இந்த திட்டத்திற்காக அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

LTC cash voucher scheme
 

LTC cash voucher scheme

அதோடு LTC cash voucher scheme என்ற மற்றொரு திட்டத்தினை பற்றியும் கூறியுள்ளார். அதாவது ஊழியர்களுக்கான விடுமுறை பயண சலுகை. இது அரசு ஊழியர்களுக்கும், ஒழுங்கமைப்பட்ட துறை சார்ந்த ஊழியர்களுக்கும் (organized sector employees) கிடைக்கும். இந்த எல்டிசி கேஸ் வவுச்சர் திட்டத்தில் leave encashment scheme திட்டமும் அடங்கும்.

பயணக் கொடுப்பனவு

பயணக் கொடுப்பனவு

இந்த பயணக் கொடுப்பனவில் ஊழியர் விமானப் பயணம் மற்றும் ரயில் பயணச் செலவைப் பெறுகிறார். கூடுதலாக, ஊழியர்களுக்கு 10 நாள் விடுமுறையும் வழங்கப்படுகிறது. ஆனால்

கொரோனாவினால் இந்த எல்டிசி-யைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஊழியர்களுக்கு பயணக் கொடுப்பனவு பணமாக கொடுக்கப்படும்.

இப்படியும் செலவு செய்து கொள்ளலாம்?

இப்படியும் செலவு செய்து கொள்ளலாம்?

தேவையை அதிகரிக்கும் விதமாக ஊழியர்கள் இந்த பணத்தினை பயன்படுத்தி 12% அல்லது அதற்கு மேற்பட்ட ஜிஎஸ்டி வரியினை ஈர்க்கும் பொருட்களை வாங்கலாம். இதன் காரணமாக நுகர்வோர் தேவையும் அதிகரிக்கும். அதோடு ஊழியர்கள் எல்டிசி பண வவுச்சரை டிஜிட்டல் பயன்முறை மூலமாகவும், ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட இடங்களில் மார்ச் 31, 2020க்கு முன்பாக செல்விட முடியும்,.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala sitharaman announces Special festival advances of Rs.10,000 for govt employees

Finance minister Nirmala sitharaman announces Special festival advances of Rs.10,000 for govt employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X