முஸ்லிம் மக்கள், முதலீடு.. அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில்..!

அமெரிக்காவில் பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் (PIIE)-ல் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பற்றி பேசும் போதும் இந்தியாவிற்கு இதுவரை வராதவர்களின் கருத்துக்களைக் கேட்பதை விட, இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முதலீட்டாளர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

PIIE தலைவர் ஆடம் எஸ் போசன், எதிர்க்கட்சியில் உள்ள எம்.பி.க்கள் பதவியை இழப்பது குறித்தும், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது குறித்து வெளிநாட்டு பத்திரிகைகளில் வந்த செய்திகள் குறித்து கேட்டார்.

முஸ்லிம் மக்கள், முதலீடு.. அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன்  கொடுத்த பதில்..!

இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் உலகில் இரண்டாவது பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா, இதேபோல் இந்தியாவில் முஸ்லீம் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசின் ஆதரவுடன் அவர்களின் வாழ்க்கை கடினமாகவோ இருந்தாலோ அல்லது கடினமாக மாற்றப்பட்டாலோ 1947 இல் இருந்ததை விட முஸ்லிம் மக்கள் தொகை பெருகுமா? என்று நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். இதோடு பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம் மக்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

முஸ்லிம் மக்கள், முதலீடு.. அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன்  கொடுத்த பதில்..!

இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகள் காரணமாக முதலீடுகள் பாதிக்கப்படுகிறதா என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-யிடம் PIIE தலைவர் Adam S Posen கேட்ட போது. இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர், "அதற்கான பதில் இந்தியாவிற்கு வரும் முதலீட்டாளர்களிடம் உள்ளது என்று நான் நினைக்கிறேன், இந்தியாவிற்கு தொடர்ந்து முதலீட்டாளர்கள் வருகின்றனர். இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் ஒருவர், காதில் கேட்கும் செய்திகளை நம்பாமல், இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைப் நேரில் பாருங்கள் என்று மட்டுமே நான் கூறுவேன், "என்று அவர் கூறினார்.

முஸ்லிம் மக்கள், முதலீடு.. அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன்  கொடுத்த பதில்..!

இந்தியா மற்றும் பிற வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதார நாடுகள் (EMEs) வளர்ந்து வரும் சந்தையாக இருப்பதன் சுமையை சுமந்து வருகிறது. ஆனாலும் தொற்றுநோய்க்குப் பிந்தைய இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்திய மக்களை பாதுகாத்துள்ளது என்றும் நிதி அமைச்சர் கூறினார்.

இந்தியாவின் உற்பத்தி கனவுக்கு மதிப்பு சங்கிலி கட்டாயம் தேவை என்பதால் PLI திட்டத்தை அறிமுகம் செய்தோம், இது உள்நாட்டு சந்தையில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சந்தையிலும் சாதகமாக வாய்ப்புகளை உருவாக்கியது எனவும் கூறினார். இதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும், நுகரும் பொருட்களும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+