உலக அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது. உலக ஜிடிபியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளி இருக்கிறது.
உலகளாவிய ஜிடிபி பங்களிப்பில் சீனாவும் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக இந்தியா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டது என உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் கூறியிருக்கிறார். உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் முதல் 10 நாடுகளின் பங்களிப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதில் உலகின் பொருளாதார பலம் அமெரிக்காவிடமிருந்து இந்தியா சீனாவை நோக்கி மாறுவதாக குறிப்பிட்டு இருகிறார். எலான் மஸ்க் உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவராக இருப்பவர்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் முன்னிலையில் உள்ள நாடுகளின் பட்டியலை அவர் பகிர்ந்திருக்கிறார். ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அந்த பட்டியலில் 26.6 சதவீத ஜிடிபி உடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 17 சதவீத ஜிடிபி உடன் இந்தியா இரண்டாம் இடத்திலும் 9 சதவீதம் ஜிடிபி உடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் இந்தோனேசியா, துருக்கி, நைஜீரியா, பிரேசில், வியட்நாம், சவுதி அரேபியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. உலக பொருளாதார பலம் அமெரிக்காவிடமிருந்து இந்தியா மற்றும் சீனாவை நோக்கி மாறுகிறது என எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். அதாவது உலக உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவும் சீனாவும் சேர்ந்து கிட்டத்தட்ட 43 சதவீத ஜிடிபி பங்களிப்பு கொண்டிருக்கின்றன என எலான் மஸ்க் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த பட்டியலில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் தான் இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா பட்ஜெட் தாக்கலுக்கு பின் மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் எலான் மஸ்கின் பதிவினை குறிப்பிட்டார்.
ஐஎம்எப்-இன் தரவுகளை பாருங்கள் இந்தியாவின் ஜிடிபி பங்களிப்பு 17 சதவீதம் என உயர்ந்துள்ளது. அந்த அளவிற்கு இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறது என எலான் மஸ்க் தன்னுடைய பதவில் குறிப்பிட்டுள்ளார். சீனா 26 சதவீத பங்களிப்பைக் கொண்டிருக்கிறது இந்தியா 17 சதவீத பங்களிப்பைக் கொண்டிருக்கிறது . இந்த இரண்டு நாடுகளும் ஒட்டுமொத்தமாக 43 சதவீத ஜிடிபி பங்களிப்பை கொண்டு இருக்கின்றன.
இந்தியாவின் பொருளாதார பலம் எந்த அளவில் இருக்கிறது, சீனாவுக்கு அடுத்த இடத்தில் நாம் வந்து விட்டோம் 26 மற்றும் 17 விரைவில் இந்த இடைவெளியையும் நாம் சரி செய்து விடுவோம் என கூறினார். எதிர்க்கட்சிகளுக்கும் நான் இதனை தான் கூற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications