மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை மோடி 3.0 அரசின் முதல் முழு பட்ஜெட்டிற்கான பைனல் டச்-ஐ நேற்று மாலையில் நடந்த முக்கியமான கூட்டத்தில் செய்தார், இந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கானதாக இருக்கும் என்பதை மோடி நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு மக்களிடம் பேசுகையில் "இந்தியாவின் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மகாலட்சுமியின் அருள் தொடர்ந்து பொழிந்திட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்.
இதன் மூலம் இந்த பட்ஜெட் கட்டாயம் நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்விக்கும் வரி குறைப்பு, தங்கம், பெட்ரோல் - டீசல் விலை, வருமான வரியில் தளர்வு மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை உயர்த்துவதற்கான தேவைகளைச் சமநிலைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி, தொடர்ந்து எட்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2024-25 நிதியாண்டில் GDP வளர்ச்சி 6.4% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஒரு தசாப்தத்தில் மிகக் குறைந்த வளர்ச்சி ஆகும். 2026 நிதியாண்டில் 6.3% முதல் 6.8% வரை தேசிய வருவாய் வளர்ச்சி இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது.
இதேபோல் 2047 ஆம் ஆண்டில் விகசித் பாரத் இலக்கை அடைய, ஆண்டுக்கு 8% வளர்ச்சி விகிதம் அவசியம் என்பதால் இந்த இலக்கை அடைவதில் பெரும் சவால் இருக்கப்போகிறது.
நிதியமைச்சகத்தின் டிவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவில்
"நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிதியமைச்சர், இன்று டெல்லியில் உள்ள நார்த் பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கான பைனல் டச்வழங்கும்போது, பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உரையாடினார்" என்று X பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியும் பங்கேற்றார்.
நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 4 ஆண்டுகளில் இல்லாத 6.4 சதவீதமாகக் குறையும், அதன் தசாப்த சராசரிக்கு அருகில் இருக்கும் பின்னணியில் பட்ஜெட் வரும்.
நடுத்தர வர்க்கத்தின் மீதான விலைவாசி அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, வருமான வரி வரி விகிதங்கள், வருமான வரி விலக்குகள் மற்றும் வருமான வரி கழிவுகளில் மாற்றங்களை இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வருவார் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications