ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன், பட்ஜெட் அறிக்கையைத் தயார் செய்த அதிகாரிகள் இணைந்து அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்த நிகழ்வின் மூலம் பட்ஜெட் தயாரிக்கும் பணி முடிவடைந்து பட்ஜெட் அறிக்கை பிரிண்டிங் செய்யப்படுவதற்கான பணிகள் துவங்குவதை உறுதிப்படுத்தும் நிகழ்வாக இது இருக்கும்.

அந்த வகையில் இந்த வரும் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அச்சம் இருக்கும் காரணத்தால் அறிக்கையைப் பிரிண்டிங் செய்யாமல் டிஜிட்டல் முறையில் மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறாது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சனிக்கிழமை பட்ஜெட் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பட்ஜெட் குழு அல்வா தயாரித்துள்ளது. இதன் மூலம் பட்ஜெட் தாக்கலுக்கான கவுன்டவுன் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அனைத்து முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டு, பெரிய கடாயில் அல்வா தயாரிக்கப்பட்டுப் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவருக்கும் அளிக்கப்படும்.
இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதியியல் செயலாளரான அஜய் பூஷன் பாண்டே, பொருளாதார விவகாரத்துறை செயலாளர் தருண் பஜாஜ், செலவின செயலாளரான டிவி சோம்நாத், வங்கித்துறை செயலாளர் டெபாஷிஷ் பாண்டா, DIPAM அமைப்பின் செயலாளர் டிகே பாண்டே, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான கேவி சும்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் தான் பட்ஜெட் அறிக்கையைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஏ டீம். இக்குழுவிற்குத் தலைவராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திகழ்கிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications