மத்திய நிதியமைச்சகம் 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளை விரைவில் துவங்க உள்ளது. இதில் முதல்கட்டமாக, அக்டோபர் 10 அன்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் அதே நாளில் மத்திய புள்ளியியல், திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகங்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தும் என்று நிதியமைச்சகம் பட்ஜெட் திட்ட தயாரிப்பின் அட்டவணையை வெளியிட்டு உள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மிகவும் முக்கியமானது, ஒருபக்கம் மத்திய அரசு இந்த நிதியாண்டிலும் தனது நிதியியல் பற்றாக்குறை அளவீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1% மற்றும் அடுத்த நிதியாண்டில் 4.5%க்கு கீழ் கட்டுப்படுத்தும் இலக்கை எட்டுமா என்பதை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

இதேபோல் 15வது நிதியியல் கமிஷன் சுழற்சியின் இறுதி ஆண்டும் 2025-26 தான், எனவே அடுத்த பட்ஜெட் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 16வது நிதியியல் கமிஷன் அறிக்கை உருவாக்குவதற்கு இந்த பட்ஜெட் மூலம் ஏற்படும் பொருளாதார மாற்றங்களும், நிதியியல் இலக்குகளும் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளை உறுதியாக நிர்ணயித்து, நடப்பாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மீது இறுதி மதிப்பீடுகளை செய்வதற்காக, மத்திய நிதியமைச்சகம் அக்டோபர் 10 முதல் பல துறை அமைச்சகங்கள், பல தரப்பினர் உடனான இந்த கூட்டங்கள் நவம்பர் 11 வரை நடக்கும். ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் தயாரிக்கும் செயல்முறை அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துடனான கூட்டம் அக்டோபர் 11 அன்று நடைபெறும், அதைத் தொடர்ந்து பெட்ரோலியம் அமைச்சகங்கள் (அக்டோபர் 14), தொழில் மற்றும் MSME (அக்டோபர் 15), வீட்டுவசதி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (அக்டோபர் 17), கிராமப்புற வளர்ச்சி (அக்டோபர் 18), வீட்டு வசதி (அக்டோபர் 22), பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் (அக்டோபர் 24), நிறுவன விவகாரங்கள், ஜவுளி மற்றும் எஃகு (அக்டோபர் 28), வேளாண்மை (நவம்பர் 5), சாலை போக்குவரத்து (நவம்பர் 7) மற்றும் ரயில்வே (நவம்பர் 11) ஆகியவற்றுடன் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளுடன் கூட்டம் அக்டோபர் 21 அன்று நடைபெறும், அதைத் தொடர்ந்து பொருளாதார விவகாரங்கள் துறை (அக்டோபர் 24), செலவு மற்றும் நிதி சேவைகள் துறை (அக்டோபர் 25) முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (அக்டோபர் 28) ஆகியவற்றுடன் நடைபெறும்.
கடந்த வாரம் பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) வெளியிட்ட பட்ஜெட் சுற்றறிக்கையைத் தொடர்ந்து இந்த அட்டவணை வெளியாகியுள்ளது.
அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இந்த கூட்டங்களுக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறைத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் உடன் இத்தகைய சந்திப்புகளை நடத்த உள்ளார்.
இந்த கூட்டத்தில் முக்கியமான பணி என்னவென்றால் ஒவ்வொரு துறையினரும், தனது துறை சார்ந்து வைக்கப்படும் பரிந்துரைகள், கோரிக்கைகள் அடிப்படையில் நிதியமைச்சகம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கும். எனவே மத்திய நிதியமைச்சகத்தின் ஒவ்வொரு சந்திப்பும் மிகவும் முக்கியமானது அவசியமானதாகும்.


Click it and Unblock the Notifications