இந்தியாவும், இந்திய பொருளாதாரமும் பல முனைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 3.75 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை தொட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 2 டிரில்லியன் டாலராக மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3.75 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார். இதோடு சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா மிகவும் பிரகாசமான இடத்தில் இருப்பதாக தெரிவித்தார் நிதியமைச்சர்.

2023 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 3.75 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டு உயர்ந்து உலகளவில் 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு கீழ் பிரிட்டன் 3.159 டிரில்லியன் டாலர், பிரான்ஸ் 2.924 டிரில்லியன் டாலர், கனடா 2,089 டிரில்லியன் டாலர், ரஷ்யா 1.840 டிரில்லியன் டாலர், ஆஸ்திரேலியா 1.550 டிரில்லியன் டாலர் உடன் உள்ளது.
இதேபோல் இந்தியாவுக்கு மேல் ஜெர்மனி 4.309 டிரில்லியன் டாலர், ஜப்பான் 4.410 டிரில்லியன் டாலர், சீனா 19.374 டிரில்லியன் டாலர், அமெரிக்கா 26.854 டிரில்லியன் டாலர் உடன் முதல் 4 இடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியா பிரிட்டன் நாட்டை முந்தி 5வது இடத்திற்கு முன்னேறியது.

உலக வங்கி தனது ஜனவரி கணிப்பில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி என்பது 1.7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த நிலையில், தற்போது 2.1 சதவீதமாக இருக்கும என கணித்துள்ளது. சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீடு 2022ல் 3.1 சதவீதமாகவும், 2023ல் 2.1 சதவீதமாகவும் இறங்கியுள்ளது. 2025 ல் மீண்டும் 3 சதவீதத்திற்கு உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக குறைத்துள்ளது, இது ஜனவரி மாத முந்தைய கணிப்பை காட்டிலும் 0.3 சதவீத குறைவாகும். 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவீதமாக மதிப்பிட்டு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இதை தொடர்ந்து 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) 7.6 சதவிகிதத்துடன் இந்த ஆண்டின் மொத்த GDP வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என கணித்துள்ளது. ஆனால் உலக வாங்கியின் கணிப்பில் 6.6 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக குறைத்துள்ளது.


Click it and Unblock the Notifications