ஓஹோ... நிதி அமைச்சர் இன்று இந்த 7 விஷயங்களை பற்றி தான் பேசுகிறாரா!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மே 13, 2020-ல் இருந்து, தினமும் மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர்களை டெல்லியில் சந்தித்தார்.

அந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி சொன்ன "சுய சார்பு பாரதம்" திட்டம் தொடர்பாகவும், கொரோனா வைரஸில் இருந்து மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் மீட்டு எடுப்பது தொடர்பாக பேசி வருகிறார்.

இந்த சந்திப்பில் அரசு செய்த வேலைகளையும், இனி செய்ய இருக்கும் வேலைகளை எல்லாம் பட்டியலிட்டு விளக்கிக் கொண்டு இருக்கிறார்.

4 நாட்கள்

4 நாட்கள்

கடந்த 4 நாட்களாக விவசாயம், பால் வளம், சிறு குறு தொழில்முனைவோர்கள், மீன் வளம், தேனி வளர்ப்பு, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள், ஹவுசிங் கம்பெனிகள், புலம் பெயர் தொழிலாளர்கள், வியாபாரிகள், தெருக்கடை வியாபாரிகள், ஸ்டார்ட் அப் கம்பெனிகள், விண்வெளி, தொழில் துறை... என பலருக்கும் பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார் அல்லது ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் விஷயங்களை அதிகப்படுத்த இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.

11 மணி

11 மணி

வழக்கமாக மாலை 4 மணிக்கு வந்து பத்திரிகையாளர்களைச் சந்திப்பவர், இன்று காலை 11 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிக் கொண்டு இருக்கிறார். இன்றைய சந்திப்பில் எதைப் பற்றிப் பேச இருக்கிறார்..? என்கிற கேள்விக்கு அவரே தெளிவாக பதில் கொடுத்து இருக்கிறார்.

7 விஷயங்கள்

7 விஷயங்கள்

1. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
2. சுகாதாரத் துறை மற்றும் கல்வி
3. கொரோனா வைரஸ் காலத்தில் வியாபாரம் செய்வது
4. கம்பெனிகள் சட்டத்தில், க்ரிமினல் குற்றங்களாக பார்க்கப்படுபவைகளை, கிரிமினல் குற்றங்களாக இல்லாமல் மாற்றுவது
5. வியாபாரம் செய்வதை எளிமைப்படுத்துவது
6. பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும துறை சார்ந்த கொள்கைகள்.
7. மாநில அரசு மற்றும் அதன் வளங்கள்... என 7 முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேச இருக்கிறாராம்.

பார்ப்போம்

பார்ப்போம்

இந்த ஏழு விஷயங்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், என்ன மாதிரியான புதிய விஷயங்களை அறிவிக்க இருக்கிறார், இந்த அறிவிப்புகளால் யாருக்கு என்ன பயன் இருக்கும் என்பதை எல்லாம் அடுத்தடுத்த கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+