அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி திவாலான பின்பு அவசர அவசரமாக திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்ட First Republic Bank-ஐ சுமார் 11 வங்கிகள் நிதியுதவி செய்து காப்பாற்றியது. இதன் எதிரொலியாக தான் கிரெடிட் சூயிஸ் வீழ்ந்து UBS கைப்பற்றல் மூலம் காப்பாற்றப்பட்டது.
இந்த நிலையில் ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் Deutsche Bank மூலம் ஐரோப்பிய சந்தைக்கு அடுத்த பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது. வியாழன் இரவு முதல் Deutsche Bank-ன் credit default swaps அளவு பெரிய அளவில் அதிகரித்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஐரோப்பிய பங்குச்சந்தை துவங்கியது முதல் Deutsche Bank பங்குகள் சுமார் 13%-க்கு மேல் சரிந்துள்ளது.
இதன் எதிரொலி மூலம் ஏற்படும் பாதிப்புகள் இந்திய பொதுத்துறை வங்கிகள் எப்படி உள்ளது, பொதுத்துறை வங்கிகளின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்காக மார்ச் 25 அன்று நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் (பிஎஸ்பி) நிர்வாக இயக்குநர்களை சந்திக்க உள்ளார்.
இந்திய வங்கிகள்
இந்திய வங்கிகள் அதானி குழுமத்தின் பங்கு சரிவு பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வேளையில் உலக நாடுகளில் வங்கிகள் அடுத்தடுத்து சீட்டுக்கட்டு போல் சரிந்து வருவதால், பொதுத்துறை வங்கிகளின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முக்கிய திட்டங்கள்
இது மட்டும் அல்லாமல் இக்கூட்டத்தில் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு உதவ அவசர கடன் வரி உத்தரவாத திட்டம் (ECLGS), கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி), ஸ்டாண்ட்-அப் இந்தியா, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (பிஎம்எம்ஒய்) உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் வங்கிகளின் முன்னேற்றம் மற்றும் எட்டியுள்ள இலக்கு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப் போவதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல்
பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் முழு ஆய்வுக் கூட்டம் இது என்பதால் கூடிதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முக்கிய துறைகளுக்கான கடன் அளிப்பு உட்பட, பட்ஜெட்டில் முன்னிலைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்துமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலதன செலவினம்
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான capital investment-ஐ அறிவித்த நிலையில், 2023-24 ஆம் நிதியாண்டுக்கு 10 லட்சம் கோடி ரூபாயை அறிவித்தார். இந்த மூலதன பகிர்வில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கும்.
பென்ச்மார்க் வட்டி விகிதம்
இதேவேளையில் அமெரிக்கா மத்திய வங்கி, அந்நாட்டு பிராந்திய வங்கிகள் திவாலாகும் வேளையிலும் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய மத்திய வங்கி, பேங்க் ஆப் இங்கிலாந்து ஆகியவையும் வட்டி விகிதத்தை அதிகரிக்க தயாராகியுள்ளது.


Click it and Unblock the Notifications