சென்னை: இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பின் தலைவர் மாதபி புரி புச் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று முதல் முறையாகத் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார். மேலும், புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் தங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு விளக்கங்களை வழங்கி வருவதாக அவர் கூறினார்.
"எனக்குத் தெரிந்த வரையில், ஹிண்டர்பெர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் சிலவற்றிற்கு புச் தம்பதியர் பதிலளித்து வருகின்றனர். காங்கிரஸின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இதற்கு உண்மையான விளங்கங்களை அவர்கள் வெளியிட்டு வருவதன் மூலம், உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று நிர்மலா சீதாராமன் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மாதபி புச் செபியின் முழுநேர உறுப்பினராக இருந்தபோது, அவர் முன்பு பணி செய்த ICICI வங்கியிலிருந்து பெற்ற பணம் தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் எழுப்பிய குற்றச்சாட்டுகளை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஷார்ட் செல்லரான ஹிண்டன்பெர்க் ரிசர்ச், மாதபி புச் ஆதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளைச் சரியாக விசாரிக்காதத்திற்கு, அதானி குழும உரிமையாளர்களுக்குச் சொந்தமான நிறுவனத்தில் புச் குடும்பத்தின் முதலீடுகள் இருப்பது தான் காரணம் என தெரிவித்தது. இதை மறுத்து புச் குடும்பம் விளக்க அறிக்கை வெளியிட்ட நிலையில், 2வது முறையாக காங்கிரஸ் கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்க அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர்.
புச் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், மாதபி புச், அகோரா கண்சல்டிங் மற்றும் அகோரா பார்ட்னர்கள் ஆகிய நிறுவனங்களுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கைகளையும் தான் கையாண்டதில்லை என்று தெளிவுபடுத்தினார். இந்த நிறுவனங்களில் அவர் 99% பங்கு வைத்திருப்பதோடு, 2017 இல் செபியில் சேர்ந்த பிறகும் வருவாய் ஈட்டி வருகின்றார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் ஹேரா, 2017 முதல் 2023 வரையிலான காலத்தில், புச் செபியின் முழுநேர உறுப்பினராகவும், பின்னர் தலைவராகவும் இருந்தபோது, 36.9 கோடி ரூபாய்க்கு மதிப்புள்ள பட்டியலிடப்பட்ட பங்குகளில் வர்த்தகம் செய்ததாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், அவர் பத்திரங்களில் மொத்த வர்த்தகம் ஆண்டு வாரியாக பிரித்து காட்டினார். இது மொத்தம் 36.9 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. இது செபியின் நிர்வாக உறுப்பினர்களுக்கான Conflict of Interest குறித்த விதிக்கோடு (2008) பிரிவு 6-ஐ மீறுவதாகும் என்று அவர் கூறினார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications